WhatsApp | 9087316855
Advertise

Diwali celebration in underprivileged homes by Bharatmata Charitable Trust

பாரதமாதா நற்பணி அறக்கட்டளை சார்பில் ஆதரவற்ற இல்லங்களில் தீபாவளி கொண்டாட்டம் 

கோவை உடையாம்பாளையம் பாரதமாதா நற்பணி அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் ஆதரவற்ற இல்லங்கள் மற்றும் பகுதி வாழ் ஏழை, எளிய மக்களுக்களுடன் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. எனவே இந்த வருடம் பாரத மாதா நற்பணி அறக்கட்டளையின் ஆண்டு விழாவை முன்னிட்டு தீபாவளி பண்டிகையை உடையாம்பாளையம் பகுதியில் 100க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. 

அதனை தொடர்ந்து தீபாவளி நாளான இன்று மருதமலை பகுதியில் உள்ள உதவும் கரங்கள் வடவள்ளி பகுதியில் உள்ள சேவாஸ்ரமம் மற்றும் சௌரிபாளையம் பகுதியில் உள்ள செஷையர் இல்லம் மற்றும் அரவணைக்கும் அன்பு இல்லம், சமாதானம் முதுமக்கள் மனை, பொங்கலூர் பாரதியார் குருகுலம் ஆகிய இடங்களுக்கு சென்று அவர்களுக்கு தேவையான உணவு, அரிசி, பழங்கள், பிஸ்கட் பிரட் மற்றும் அடிப்படை தேவையான அனைத்து மளிகை பொருட்கள், புத்தாடைகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வானது, பரதமாத நற்பணி அறக்கட்டளை நிர்வாக அரங்காவலர் கெளரி சங்கர் தலைமையில், ராஜா கார்த்திக் மணிகண்டன் இளங்கோ ராஜேஷ் சரவணன் சுஜன் டார்வின் நவீன் மெய்யரசன் சுரேஷ் பாரதி அயில்சாமி பிரவீன் ஷியாம் சக்தி மாதவன் ரமேஷ் குணசேகரன், தீபக், பிரகாஷ், ஸ்ரீதர், கன்ஷிகா, மோகிதாஸ்ரீ ஆகியோர் கலந்து கொண்டே நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

தொடர்ந்து, ஆதரவற்ற இல்லங்களில் உள்ள மாணவர்களுடன் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடப்பட்டது .  பின்னர் இல்லங்களில் மாணவர்களுக்கு மதிய உணவுகள் வழங்கப்பட்டது.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe