இந்திய மருத்துவம் சங்கம் கோவை கிளை சார்பில் மருத்துவர்கள் தின விழா
ஏதாவது காரணங்களுக்காக மருத்துவமனை தாக்கப்பட்டாலோ, மருத்துவர்கள் பயமுறுத்தும் படி நடவடிக்கை மேற்கொண்டாலோ உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்
மருத்துவர்கள் தின விழாவில் போலீஸ் கமிஷனர் பேச்சு
மனித உயிர்களை காப்பாற்ற காவல்துறையும், மருத்துவத்துறையும் இணைந்து செயல்படுகிறது
மருத்துவர்கள் தின விழாவில் போலீஸ் கமிஷனர் பேச்சு
கோவை, ஜீலை.10
இந்திய மருத்துவம் சங்கம் கோவை கிளை சார்பில் மருத்துவர்கள் தின விழா நிகழ்ச்சி கோவை ஐ.எம்.ஏ அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் இந்திய மருத்துவச் சங்கத்தின் தலைவர் டாக்டர் எம். துரை கண்ணன் வரவேற்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கோவை மாநகர போலீஸ் கமிஷனர் வி. பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு, மருத்துவத் துறையில் சேவையாற்றும் சிறந்த மருத்துவர் களுக்கு விருதுகளை வழங்கினார்
.
தொடர்ந்து அவர் பேசுகையில், இந்திய மருத்துவ சங்கமும், காவல்துறையும் நெருங்கிய உறவுடன் செயல்பட்டு வருகிறது. பல்வேறு வழக்குகளில் காயம்பட்டவர்களுக்கும், விபத்துகளில் காயம் அடைந்தவர்களையும் காப்பாற்றும் பொறுப்பு இருவருக்கும் உள்ளது. தமிழக மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தின்படி,
கோவையில் சமூக விரோதிகளால் ஏதாவது காரணங்களுக்காக மருத்துவமனை தாக்கப்பட்டாலோ, மருத்துவர்கள் பயமுறுத்தும் படி நடவடிக்கை மேற்கொண்டாலோ உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவர்களும், காவல்துறையினர் போல 24 மணி நேரமும் பணியாற்றக் கூடியவர்கள். அறுவை சிகிச்சைகள் போன்றவற்றிற்காக மருத்துவர்கள் அவசரமாக செல்லக்கூடிய நிலையில் அவர்கள் விரைந்து செல்லும் வழியில் காவல்துறை பல்வேறு ஏற்பாடுகள் செய்துள்ளோம். உடல் உறுப்புகள் அறுவை சிகிச்சைக்காக, தானம் பெற்ற உடல் உறுப்புகளை சாலைகளில் அவசரமாக எடுத்து செல்லும் பொழுது, காவல்துறை அதற்கான உதவிகளை செய்து உயிர்களை காப்பாற்ற முக்கியத்துவம் கொடுத்து காவல்துறையும், மருத்துவத்துறையும் இணைந்து செயல்படுகிறது. காவலர்களின் மன அழுத்தத்தை போக்குவதற்கான ஆலோசனைகளை இந்திய மருத்துவ சங்கங்கள் மூலம் பெற்றுக் கொள்வோம் என்றார்.
நிகழ்ச்சியில் டாக்டர் கருணா, டாக்டர் கார்த்திக் பிரபு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில்
ஐ.எம்.ஏ செயலாளர் டாக்டர் வி. கோசல்ராம், நிதிச் செயலாளர் டாக்டர் வி.சீதாராம், இணைச் செயலாளர் டாக்டர் பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.