WhatsApp | 9087316855
Advertise

Drive the car properlyTragedy happened due to ignorance

முறையாக கார் ஓட்ட தெரியாததால் நடந்த விபரீதம்

கோவை போத்தனூர் அருகே கார் மோதி சைக்கிளில் சென்ற 8 வயது சிறுவன் பலிவிளையாட சென்ற சிறுவன் மீது கார் மோதி விபத்து

விபத்தின் பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியீடு

கோவை போத்தனூர் வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பஷீத்.தனியார் நிறுவனத்தில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார்.இவரது மகன் ராய்புதீன் (8) போத்தனூரில் உள்ள தனியார் பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வந்தார்.ராய்புதீன் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது சைக்கிளில் விளையாடச் சென்றுள்ளார்.அப்போது அதே பகுதியை சேர்ந்த சயது முகமது பெரோஸ் என்பவர் தனது காரை திடீரென இயக்கிய போது, சிறுவன் மீது மோதி தூக்கி வீசப்பட்டு அங்கிருந்த சுற்று சுவர் மீது விழுந்தார்.அதில் படுகாயமடைந்த சிறுவனை பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe