எய்ம்ஸ்டு சர்வதேச அறக்கட்டளை சார்பில் “போதை விழிப்புணர்வு மாரத்தான்”
எய்ம்ஸ்டு சர்வதேச அறக்கட்டளை சார்பில் “போதை விழிப்புணர்வு மாரத்தான்”
-600 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பிரிவு பகுதியில் எய்ம்ஸ்டு சர்வதேச அறக்கட்டளை சார்பில் “போதை விழிப்புணர்வு மாரத்தான்” நிகழ்ச்சி நடைபெற்றது. எய்ம்ஸ்டு சர்வதேச அறக்கட்டளை நிர்வாகி ஷிகான் விஜயகுமார் வரவேற்புரை வழங்கினார். கோவை மாநகராட்சியின் துனைமேயர் வெற்றிச்செல்வன் கொடியசைத்து மாரத்தான் நிகழ்வை துவக்கி வைத்தார்.
இந்த மரத்தான் நிகழ்ச்சியில்,
பல்வேறு பிரிவுகளில் வயதின் அடிப்படையில் மாணவ, மாணவிகள் மற்றும் ஆண்கள் பெண்கள் இருபாலர்கள் தனித்தனி பிரிவுகளில் 600 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இப்போோட்டியானது இடையர்பாளையம் பிரிவு பகுதியில் துவங்கி கோவைப்புதூர் பிரிவு வரை முடிவடைந்தது. 3 கிலோமீட்டர் மற்றும் 5 கிலோ மீட்டர் தொலைவில் போட்டி நடைபெற்றது இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் டீ சர்ட்,
சான்றிதழ்கள், பதக்கம் மற்றும் காலை உணவு வழங்கப்பட்டது.
இதில், VLB ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் Dr.சத்தீஸ்குமார் கலந்துகொண்டு மாரத்தான் போட்டியில் பங்குபெற்ற அனைவருக்கும் பதக்களையும், குறிச்சி இண்டஸ்டிரியல் லயன்ஸ் கிளப் தலைவர் கண்ணன் மற்றும் மதிவணன் ஆகியோர் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்கள்.
மாரத்தான் நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் எய்ம்ஸ்டு அறக்கட்டளையின் நிர்வாகி நிரஞ்சனாதேவி செய்தார்.