WhatsApp | 9087316855
Advertise

Echanari Industries & Merchants Association Inauguration of New Executives

ஈச்சனாரி இண்டஸ்ட்ரீஸ் & மெர்ச்சண்ட்ஸ் அசோசியேஷன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

ஈச்சனாரி இண்டஸ்ட்ரீஸ் & மெர்ச்சண்ட் அசோசியேஷன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

ஈச்சனாரி இண்டஸ்ட்ரீஸ் & மெர்ச்சண்ட் அசோசியேஷன் EIMAC (ஐமேக்) என்ற சங்கம் கடந்த மூன்று வருடத்திற்கு முன்பு குறுகிய நபர்களை உறுப்பினர்களாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. தற்போது 50 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. ஈச்சனாரி இண்டஸ்ட்ரீஸ் & மெர்ச்சண்ட் அசோசியேஷன்
ஈச்சனாரி பகுதியைச் சேர்ந்த சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களால் தோற்றுவிக்கப்பட்டது. இதில் உறுப்பினர்களாக இருக்கும் பட்சத்தில் தங்களுக்குள் உள்ள நபர்களை வைத்து முறையாக சங்கத்திற்கு அங்கீகாரம் பெற்று, தலைவர் செயலாளர், பொருளாளர் போன்றோரை நியமித்து சங்கத்தை நடத்தி வந்தனர்.

தற்போது இச்சங்கத்தில் 50க்கு மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளதால் தேர்தல் மூலம் புதிய தலைவர் சிம்கோ சித்திக், செயலாளர் MRS சாகுல் ஹமீது, பொருளாளர் செய்யது முகமது மரைக்காயர், துணைத் தலைவர் ராஜ் கபூர், இணைச்செயலாளர் ரகுநாதன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பதவியாளர்களுக்கு பதவி ஏற்பு விழா ஈச்சனாரி செட்டிபாளையம் சாலையில் அமைத்துள்ள ஈச்சனாரி இண்டஸ்ட்ரீஸ் & மெர்ச்சண்ட் அசோசியேஷன் அலுவலகத்தில் நடைபெற்றது. தொடர்ந்து, முன்னாள் தலைவர் அசன் முகமத் மற்றும் முன்னாள் உறுப்பினர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தி கௌரவிக்கப்பட்டது.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe