WhatsApp | 9087316855
Advertise

Employment for 1133 people in placement camp of giant leading companies

மாபெரும் முன்னணி நிறுவனங்களின் வேலை வாய்ப்பு முகாமில் 1133 பேருக்கு வேலைவாய்ப்பு

மாபெரும் முன்னணி நிறுவனங்களின் வேலை வாய்ப்பு முகாமில் 1133 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது.

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி சர்வஜன மேல்நிலைப் பள்ளியில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் இன்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான துவக்க விழாவில் மாநில கம்மவர் நாயுடு எழுச்சி பேரவை மாநில பொதுச் செயலாளர் அரிமா ஸ்ரீமன்சுந்தரம் வரவேற்புரை வழங்கினார். பி எஸ் ஜி சர்வஜன மேல்நிலைப்பள்ளி செயலாளர் நாராயணசாமி தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சிக்கு தென்னிந்திய விவசாயிகள் சங்கம் தலைவர் நரசிம்ம நாயுடு, பொதுச் செயலாளர் தெய்வசிகாமணி, வணிகர்கள் தொழில்துறையின் கூட்டமைப்பு மாநில தலைவர் எழிலன், கவர இன முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ணராஜ், கம்மவார் சேவா சங்கம் துணைச் செயலாளர் ரங்கராஜ், ஈக்விடாஸ் நிறுவன சி.இ.ஓ ஜான் அலெக்ஸ், கோவை மாவட்டம் வேளாண்மை உற்பத்தி குழு உறுப்பினர் செந்தில்குமார், அரிமாக்கள், ஈஸ்வர் மூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இந்த மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் ஈக்விடாஸ் டெவலப்மெண்ட் அறக்கட்டளை, தமிழ்நாடு கம்மவார் நாயுடு எழுச்சி பேரவை, பீளமேடு கம்மவார் சேவா சங்கம், தமிழ்நாடு ரெட்டி நலச்சங்கம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பாதுகாப்பு பேரவை, தென்னிந்திய விவசாயிகள் சங்கம், சரஸ்வதி இண்டஸ்ட்ரிஸ், லயன்ஸ் கிளப் ஆப் கோயம்புத்தூர் கிரீன், பி.எஸ்.ஜி சர்வஜன மேல்நிலைப்பள்ளி மற்றும் முன்னணி நிறுவனங்கள் இணைந்து இந்த மாபெரும் வேலை வாய்ப்பு முகாமினை இன்று நடத்தியது.

இதில் ஆதித்யா பிர்லா கேப்பிட்டல், ஆக்சிஸ் பேங்க், டிவிஎஸ் முன்னணி நிறுவனம் உள்ளிட்ட சுமார் 83 நிறுவனங்கள் பங்கு பெற்றது. இதில் ஆண்கள் 882 பேர் மற்றும் பெண்கள் 621 பேர் மொத்தம் 1503 பேர் கலந்து கொண்டனர். அதில் 1133 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்கது.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe