WhatsApp | 9087316855
Advertise

Environmental Health Day awareness program organized by RAAC and FICCI FLO

ராக் மற்றும் பிக்கி புளோ சார்பில் சுற்றுச் சூழல் சுகாதார நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை குடியிருப்போர் விழிப்புணர்வு சங்கம் (ராக்) மற்றும் இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பின் மகளிர் பிரிவான (பிக்கி புளோ) சார்பில் நாளை சுற்றுச் சூழல் சுகாதார நாள் கொண்டாட்டம்

கோவை குடியிருப்போர் விழிப்புணர்வு சங்கம் (ராக்) மற்றும் இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பின் மகளிர் பிரிவான (பிக்கி புளோ) சார்பில் “பசுமையை நோக்கி செல்வோம்; தூய்மையான சுவாசம் நோக்கி ஓடுவோம், குப்பைகளை சேகரிப்போம், சுற்றுச் சூழலை மாற்றுவோம்” என்ற திட்டத்தை நாளை காலை 6.00 மணிக்கு ஸ்ரீரிபு டாமன் பெவ்லி துவக்கிவைக்கிறார்.

இது குறித்து ராக் அமைப்பின் கௌரவ செயலாளர் ரவீந்தரன் மற்றும் பிக்கி புளோ அமைப்பின் தலைவர் ரமா ராஜசேகரன் கூறியதாவது :- இந்த செப்டம்பர் 2023 ல், பசுமையை நோக்கி செல்வோம்; தூய்மையான சுவாசம் என்ற தலைப்பில், சுற்றுச் சூழல் சுகாதார நாளை செப்டம்பர் 26 ல் கொண்டாட திட்டமிட்டுள்ளோம். சமுதாய பொறுப்போடு சுற்றுச் சூழல் மற்றும் நலன் பயக்கும் 3 சிறப்பான நிகழ்வுகளை நடத்த உள்ளோம். கோவையில் பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் சுற்றுச் சூழல் பாதிப்புகள் குறித்த விழிப்பணர்வு ஏற்படுத்த இந்த நிகழ்வு நடக்கிறது. இந்த நிகழ்வில் ஸ்ரீரிபு டாமன் பெவ்லி – இந்தியாவின் உழவன், தலைமை விருந்தினராக பங்கேற்கிறார்.

இந்த திட்டம் நாளை காலை 6.00 மணிக்கு கோவை நகரில் 5 இடங்களில் மேற்கொள்ளப்படுகிறது. உக்கடம் பி1 காவல் நிலையம் அருகே காலை 6.00 மணி, காந்திமாநகர் மெயின்ரோட்டில் 6.30 மணி, கொடிசியா நுழைவு வாயில் 7.00 மணி, சாய்பாபா காலனி, பி.எஸ்.என்.எல்., அலுவலகம் எதிரில் காலை 7.15 மணி மற்றும் ஜி.வி. ரெசிடென்சி விநாயகர் கோவில் 7.30 மணி அளவில் நடைபெறுகின்றது.

பிளக்கிங், நமது சுற்றுச் சூழல் சத்தம் மற்றும் சுகாதார இரண்டு பிரச்னைகளுக்கும் தீர்வாக அமைகிறது. இந்த நேர்மறையான மாற்றத்துக்கு மக்களாகிய நாம் தயாராக வேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய கோவை மாநகராட்சி, குப்பைகளையும், பிளாஸ்டிக்குகளையும் அகற்றவும், பொதுமக்களிடையே தூய்மை விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

மேலும் பள்ளி குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் சிறந்த 3 படைப்புகள் தேர்வு செய்யப்பட்டன. வெற்றிபெறும் படைப்புகள் செப்டம்பர் 26-ல் நடக்கும் விழாவில் பரிசுகள் வழங்கப்படும் என தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பிக்கி புளோ முன்னாள் தலைவர் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சங்கீதா சேடன், துணை ஒருங்கிணைப்பாளர் கல்பனா ரமேஷ் ஆகியோர் செய்து இருக்கிறார்கள்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe