WhatsApp | 9087316855
Advertise

Famous playback singer Sid Sriram’s music concert in Coimbatore on November 27

கோவையில் நவம்பர் 27ம் தேதி பிரபல பின்னணி பாடகர் சித் ஸ்ரீராமின் இசை கச்சேரி

அன்னபூர்ணா மசாலா வழங்கும் பிரபல பின்னணி பாடகர் சித் ஸ்ரீராமின் பிரம்மாண்ட இசை கச்சேரி கோவையில் வருகிற நவம்பர் 27 ம் தேதி கொடிசியா மைதானத்தில் நடைபெறவுள்ளது. மாலை 6 மணி அளவில் துவங்கும் இந்த கச்சேரி சுமார் 3 மணி நேரம் நடைபெறவுள்ளது.

இந்த இசை கச்சேரிக்கான டிக்கெட் மற்றும் நிகழ்வு குறித்து சித் ஸ்ரீராம் பேசிய ப்ரோமோ வீடியோ வெளியீடு இன்று அவிநாசி சாலையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இதில், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பளார் கலந்து கொண்டனர்.

அப்போது அன்னபூர்ணா மசாலா இயக்குனர் விஜய், அரோமா நிறுவனர் பொன்னுச்சாமி, லட்சுமி செராமிக்ஸ் நிறுவனர் முத்துராமன், அருண் ஈவன்ட்ஸ் இயக்குனர் அருண் ஆகியோர் கூறுகையில்,
இந்த நிகழ்வு 30,000க்கும் மேற்ப்பட்ட ரசிகர்களை கொடிசியா மைதானத்தில் கவரவுள்ளது. நிகழ்ச்சியினை ஒருங்கிணைப்பவர்கள் இந்த நிகழ்வை சர்வதேச இசை கச்சேரிகளுக்கு இணையாக நடத்திட வேண்டுமென முயற்சிகளை எடுத்துவருகின்றனர். அவருடைய இசை குழுவினரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க விருக்கின்றனர்.நிகழ்ச்சியில் ஒளி மற்றும் ஒலி ஆகியவற்றின் தரம் சர்வதேச நிகழ்வுகளுக்கு சமமானதாக இருக்க வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆடியோ ரிஷ்டம் , லைட் சிஸ்டம் இந்த கச்சேரியில் உபயோகிக்கப்பட உள்ளது.

இம்முறை மேடை அருகே ரசிகர்கள் நின்று பாடி ஆடும் ‘ பேன் பிட் ‘ இடம்பெறுகிறது. சுமார் 10,000 பேர் நிற்க கூடிய வகையில் அமைப்புகள் இருக்கும். ரசிகர்களுடன் அவ்வப்போது சித் ஸ்ரீராம் உரையாடல் இருக்கும்.

இந்த இசை கச்சேரிக்கான டிக்கெட் மற்றும் நிகழ்வு குறித்து சித் ஸ்ரீராம் பேசிய ப்ரோமோ வீடியோ வெளியீடு இன்று அவிநாசி சாலையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. டிக்கெட்டுகள் பேடிம் இன்சய்டர், புக் மை ஷோ, வி.எம்.ஆர். கோரோ பக்ஸ் , ரோட்டரி கேலக்ஸ்சி சங்கத்தில் கிடைக்கும்.

அத்துடன் அன்னபூர்ணா ஆனந்தாஸ் ஆகிய பிரபல உணவகங்களில் கிடைக்கவும் வழி செய்யப்பட்டுள்ளது . மேலும், நிகழ்வு நடைபெறும் கொடிசியா வளாகத்திலும் கவுண்டர்கள் இடம்பெறும்.அங்கு பெற்றுக்கொள்ளலாம். ரூ.500 முதல் ரூ.25,000 வரை டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட உள்ளன என்றனர்.

டிக்கெட்டுகளை அன்னபூர்ணா மசாலா இயக்குனர் விஜய், அரோமா நிறுவனர் பொன்னுச்சாமி, லட்சுமி செராமிக்ஸ் நிறுவனர் முத்துராமன், அருண் ஈவன்ட்ஸ் இயக்குனர் அருண் ஆகியோர் வெளியிட்டனர்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe