WhatsApp | 9087316855
Advertise

FIFA World Cup Football: Saudi Arabia beat Argentina

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து : அர்ஜென்டினாவை வீழ்த்தி சவுதி அரேபியா அணி சாதனை

ஃபிஃபா உலகக்கோப்பை தொடரில் குரூப் சி பிரிவில் இடம்பெற்றுள்ள வலிமையான அர்ஜென்டினா அணியை எதிர்த்து சவுதி அரேபியா அணி விளையாடி வருகிறது. முதல் கோலை அடித்தார் மெஸ்ஸி. ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

உலகக் கோப்பையின் மூன்றாவது நாளின் ஐந்தாவது ஆட்டத்தில் அர்ஜென்டினா, சவுதி அரேபியா அணிகள் மோதின. குரூப்-சியில் இடம்பெற்றுள்ள இரு அணிகளும் வெற்றியுடன் இந்த உலகக் கோப்பைத தொடரை தொடங்கும் வேண்டும் என்ற முனைப்பில் மோதின.

நட்சத்திர வீரர்கள் நிறைந்த அர்ஜென்டினா அணியும் உலகக் கோப்பையை வெல்வதற்கான போட்டியில் வலுவான அணியாக உள்ளது. இந்தப் போட்டியில் அர்ஜென்டினா அணி வெற்றி பெறும் என எதிர்பார்த்த நிலையில், சவுதி அரேபியா அணி இரண்டு கோல்கள் அடித்து 2-1 என்ற கணக்கில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

அர்ஜென்டினா அணி எதிர்பாராத விதமாக சவுதி அரேபியா அணியிடம் தோல்வியுற்றது. இதனால் இன்று நடைபெற்ற போட்டியில் 2-1 என்ற கணக்கில் அர்ஜென்டினா தோல்வியை சந்தித்தது. இதனால் அர்ஜென்டினா ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe