WhatsApp | 9087316855
Advertise

First Year Convocation at Kumaraguru College of Liberal Arts and Science video

குமரகுரு லிபரல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா

குமரகுரு லிபரல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா

கோவை, நவ.30 கோவை சரவணம்பட்டியில் உள்ள குமரகுரு லிபரல் கலை மற் றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரியில் உள்ள ‘தி ஆர்ப்’ வளாகத் தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நந்தி பவுண்டேஷ னின் தலைவர் மனோஜ் குமார் சிறப்பு விருந்தின ராக கலந்துகொண்டு 139 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். அவர் பேசும்போது, “பட்டதாரிகள் உண்மையானவர்க ளாகவும், துணிச்சலானவர்களாகவும் இருக்க வேண்டும். மாற்றம் மற்றும் பன்முகத்தன்மைக்கு தயாராக இருக்க வேண்டும்.
மாணவர்கள் உண்ணும் உணவு மற்றும் அவற்றை உற்பத்தி செய்யும் விவசா யிகள் பற்றி சிந்திக்க வேண்டும். ஆணாதிக்கம் என்பது ஒரு மிகப்பெரிய நோயா கும், அதிலிருந்து ஒவ்வொரு கணமும் வெளியேற நாம் முயற்சி செய்ய வேண்டும்” என கூறினார். குமரகுரு நிருவனத்தின் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர், ஜாயின்ட் கரஸ்பா டண்ட் ஷங்கர் வானவராயர், குமரகுரு லிபரல் கலை மற்றும் அறிவியல் கல்லூ ரியின் தலைவர் விஜில்லா எட்வின் கென்னடி, பேரா சிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe