WhatsApp | 9087316855
Advertise

Food in Coimbatore Launch event of the new app that distributes

கோவையில் உணவு
விநியோகம் செய்யும் புதிய செயலி துவக்க விழா

கோவை பந்தயசாலை பகுதியில் உள்ள தனியார் உணவக அரங்கில் இன்று, மை க்ரோஜோ டாட் காம், எனும் உணவு விநியோகம் செய்யும் செயலியின் அறிமுக விழா நிகழ்ச்சி நடைபெற்றது, விழாவின் துவக்க நிகழ்ச்சியாக,  ரஞ்சனா சிங்ஹால் குத்துவிளக்கேற்றி வைத்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட, ஸ்ரீ அண்ணபூர்னா குழுமங்களின் தலைவர், சீனிவாசன் இந்த செயலியை அறிமுகம் செய்து வைத்தார். இதனை தொடர்ந்து, முதல் விற்பனையை க்வாட்ரோ சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர், ஸ்ரீ பிரசாந்த் சுப்ரமணியன், செய்து அதனை பெற்று கொண்டார். விழாவின் ஒரு பகுதியாக, செய்தியாளர்களை சந்தித்து பேசிய மை க்ரோஜோ (My groZo)  செயலியின் நிர்வாக இயக்குநர், மனோஜ் கூறுகையில்,
இன்று இந்த செயலியில் உணவு விநியோகம் செய்யும் வகையில் இதனை அறிமுகம் செய்து வைத்துள்ளதாகவும், கடந்த ஒரு ஆண்டுகளாக கோவை மாநகரை சுற்றியுள்ள 25 கிலோ மீட்டர் தொலைவிலான வாடிக்கையாளர்களுக்கு, மளிகை பொருட்கள், காய்கறிகள் மற்றும் இறைச்சி வகைகளை, 60 நிமிடங்களில்  கிடைக்கும் வகையில் வழங்கி வருகின்றதாகவும், தற்போது 100க்கும் மேற்பட்ட உணவகங்கள் இதில் இணைந்துள்ளனர். கடந்த ஒரு வருடத்தில் 3200, தொடர் வாடிக்கையாளர்களாக உள்ளனர், உணவு விநியோகம் செய்யும் பணியாளர்களுக்கு வாடிக்கையாளர்களிடம் நடந்து கொள்ளும் வழிமுறைகள், சாலையில் வாகனம் இயக்கும் முறைகளை தெளிவாக பயிற்சி வகுப்புகள் நடத்தி அதன் பின்னரே, அவர்களுக்கு பணி வழங்குவதாகவும், நிறுவனத்தின், நற்பெயரை மீட்டெடுக்கும் வகையில் பணியாளர்கள் பணியாற்றுவார்கள் என்று தெரிவித்தார்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe