WhatsApp | 9087316855
Advertise

Football matches organized by Inter Polytechnic Athletic Association Coimbatore Division

இன்டர் பாலிடெக்னிக் அத்லெட்டிக் அசோசியேஷன் கோயம்புத்தூர் டிவிஷன் சார்பில் கால்பந்து போட்டிகள்

ஸ்ரீ நாராயண குரு பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் இன்டர் பாலிடெக்னிக் அத்லெட்டிக் அசோசியேஷன் கோயம்புத்தூர் டிவிஷன் சார்பில் கால்பந்து போட்டிகள் க.க சாவடியில் உள்ள ஸ்ரீ நாராயண குரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியின் துவக்க விழாவை ஸ்ரீ நாராயண குரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கல்லூரி முதல்வர் கல்பனா துவக்கி வைத்தார். ஸ்ரீ நாராயண குரு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் உதயகுமார் தலைமை தாங்கினார். ஸ்ரீ நாராயண குரு பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் மூன்றாம் ஆண்டு நடைபெறும்
இன்டர் பாலிடெக்னிக் அத்லெட்டிக் அசோசியேஷன் கோயம்புத்தூர் டிவிஷன் சார்பில் நடைபெறும் கால்பந்து போட்டியானது பிப்ரவரி 9 ம் தேதி முதல் 11ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. கோயம்புத்தூர் டிவிஷன் சார்பில் கோயம்புத்தூர், நீலகிரி மேட்டுப்பாளையம், உடுமலைப் பேட்டை, பழனி, பொள்ளாச்சி ஆகிய பகுதியிலிருந்து 22 பாலிடெக்னிக் கல்லூரிகள் இந்த கால்பந்து போட்டியில் பங்கேற்றது.

நாக்அவுட் முறையில் நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு வரும் 11ஆம் தேதி ஸ்ரீ நாராயண குரு கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் சிவகுமார் வெற்றி பெற்ற அணிக்கு கோப்பையைை வழங்க உள்ளார். இன்று நடைபெற்ற முதலாவது போட்டியில் உடுமலைப்பேட்டை
ருத்ரவேணி பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரி அணிகள் மோதி இதில் 7-0 என்ற கோல் கணக்கில் ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வெற்றி பெற்றது. கால்பந்து போட்டியை ஸ்ரீ நாராயண குரு பாலிடெக்னிக் கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் சதீஷ்குமார் ஒருங்கிணைத்தார்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe