WhatsApp | 9087316855
Advertise

For the betterment of the habitat of the tribal people, the roofing and toilet facility for the houses through rotary

பழங்குடியின மக்களின் வாழ்விடத்தை மேம்படுத்தும் வகையில், ரோட்டரி மூலம் வீடுகளுக்கு கூரை மற்றும் கழிப்பறை வசதி

பழங்குடி மக்களின் வாழ்விட மேன்மைக்காக, ரோட்டரி மூலம் ரூ.19 லட்சம் செலவில் 33 வீடுகளுக்கு மேற்கூறை, கழிப்பிட வசதி

வால்பாறை மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பழங்குடியின கிராமமான உடும்பன்  பாறையைச் சேர்ந்த பழங்குடி மக்களின் வாழ்விடம் மேன்மைக்காக,

ரோட்டரி கிளப் ஆப்  மான்செஸ்டர், ரோட்டரி கிளப் ஆப்  கோயம்புத்தூர் சென்ட்ரல் இணைந்து   நம்பிக்கையின் கூரை எனும் திட்டம் சார்பில் ரூ.19 லட்சம் செலவில் 33 வீடுகளுக்கு மேற்கூறையும், கழிப்பிட வசதியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ஆறு மாதங்களில் திட்டம் முடிக்கப்பட்டு, 33 வீடுகள் சரி செய்யப்பட்டு, 200 பேர் பயன் பெற்றுள்ளனர். இத்திட்டத்தில் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி கோவை ஆவாரம் பாளையத்தில் உள்ள கோ இந்தியா அரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ரோட்டரி மாவட்ட ஆளுநர் விஜயகுமார், கவுரவ விருந்தினர்கள் ஃபீல்ட் டைரக்டர் ராமசுப்பிரமணியம் ஐ.எப்.எஸ், பவுண்டேஷன் சர்க்கிள் உறுப்பினர் ஏ. கே. எஸ் லீமா ரோஸ் மார்ட்டின்   ஆகியோர் பயனாளிகளுக்கு வீடுகளை ஒப்படைத்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட இயக்குனர் கோகுல்ராஜ், துணை ஆளுநர் சம்பத்குமார், ஜி.ஜி.ஆர் அரவிந்த், திட்டத் தலைவர் செந்தில் ராஜகோபால், இயான் சாரிட்டபிள் டிரஸ்ட் மோகன் பிரசாத், ரோட்டரி மான்செஸ்டர் தலைவர் பிரதீப் கோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நம்பிக்கையின் கூரை திட்ட மூலம் மேலும், 22 பழங்குடி கிராமங்களில் வசிக்கும்  மக்களுக்கும் மேற்கூரை, கழிவறைகள் அமைத்து தரப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், வனச்சரக காவலர்களுக்கு சீருடை மற்றும் பல்வேறு உபகரணங்கள்  ரோட்டரி மான்செஸ்டர் சார்பில் வழங்கப்பட்டது. தொடர்ந்து ரோட்டரி மான்செஸ்டர் சார்பில் பட்டாம்பூச்சி காலண்டரும் வெளியீடு செய்யப்பட்டது. 33 பயனாளிகளுக்கு தங்கள் வீடுகளை பெற்றுக் கொண்டனர். பின்னர், அவர்களுக்கு இரவு உணவும், கங்கா திரையரங்கில் திரைப்படம் பார்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe