WhatsApp | 9087316855
Advertise

Ganapati Mulam Mantra Japa Sahitha Ashdothira Satha Kalasabhisheka Perunjandi Festival

13ம் ஆண்டு ஸம்வத்ஸராபிஷேக கணபதி மூலமந்திரம் ஜப ஸஹித அஷ்டோத்திர சத கலசாபிஷேக பெருஞ்சாந்தி பெருவிழா

13ம் ஆண்டு ஸம்வத்ஸராபிஷேக கணபதி மூலமந்திரம் ஜப ஸஹித அஷ்டோத்திர சத கலசாபிஷேக பெருஞ்சாந்தி பெருவிழா நடைபெற்றது.

கோவை குனியமுத்தூர் நிர்மலா மாதா பள்ளி, அருகே சன் கார்டன் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ யோக விநாயகர் திருக்கோவிலின் மலேசியா தைப்பிங் சிம்பாங் அருள்மிகு ஆத்தங்கரை கதிர்வேல் முருகன் மஹாமேரு மஹா பராசக்தி பச்சையம்மன் ஆலயத்தின் முன்னாள் தலைமை குருக்கள் சர்வசாதகமாக மீனாட்சி சுந்தர குருக்கள் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவானது மங்கல இசை, அனுக்கஞ, விக்னேஸ்வரா பூஜை புண்யாகவாசனம், பஞ்சகல்ய பூஜை, முதல் கால வேதிகா அர்ச்சனை,கணபதி மூல மந்திர ஐப ஸஹித அஷ்டோத்திரசத மங்கள ஹேமம், பூர்ணஹீதி, விசேஷ பூஜைகள், அருட்பிரசாதம் வழங்குதல் அதனைத் தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், பஞ்சகவ்ய பூஜை, இரண்டாம் கால வேதிகா அர்ச்சனை, கணபதி மூல மந்திரம், கோ பூஜை, அஸ்வபூஜை, யந்திரபூஜை, செளபாக்யலெஷ்மி பூஜை, பூர்ணாஹுதி விசேஷ பூஜைகள், கடம் புறப்பாடு, 108 கலசம் புறப்பாடு, பால்குடம் புறப்பாடு ,மூலஸ்தான விமான மகா கும்பாபிஷேகம், மூலவர் மற்றும் பரிவாரமூர்த்திகளுக்கு, 108 கலசாபிஷேகம், சிறப்பு பூஜைகள், கூட்டு பிரார்த்தனைகள் மற்றும் அன்னதானம் நடைப்பெற்றது.

மேலும் திருக்கோகர்ணம் எஸ்.ஹரிஹரன்சிவம், பிள்ளையார்பட்டி பாடசாலை திருக்கோவிலூர்
கே.வசந்தகுருசிவம், பெங்களூர் பாடசாலை திருகாளஹஸ்தி பிரபுதேவாசிவம்,
பெங்களுர் பாடசாலை கோயம்புத்தூர் s.சந்திரசேகர வாத்தியார், சென்னை தாம்பரம் K.ஜெய்சங்கர்குருக்கள், பிரதான சாதகம் ஆச்சாரியர்கள் வருகை தந்து மிகப் பிரமாண்ட மான முறையில் பூஜைகள் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பக்தர்கள், ஊர்பொதுமக்கள், என ஏராளமனோர் கலந்து கொண்டனர்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe