WhatsApp | 9087316855
Advertise

Ganga College of NursingZonal Level ‘Tasnagam’ Art Competitions

கங்கா செவிலியர் கல்லூரியில்
மண்டல அளவிலான ‘டாஸ்னாகாம்’ கலை போட்டிகள்

கோவை வட்டமலைபாளையத்தில் இயங்கி வரும் கங்கா செவிலியர் கல்லூரியில் தேசிய செவிலியர் சங்கத்தின் சார்பில் 30வது ஆண்டு மண்டல அளவிலான டாஸ்னாகாம் கலை மற்றும் கலாச்சார போட்டிகள் நடைபெற்றது.

விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சிறப்பு விருந்தினர் கோவை கங்கா மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர். எஸ் ராஜா சபாபதி கலந்து கொண்டு போட்டிகளை துவக்கிவைத்தார். இந்த நிகழ்வின் கௌரவ விருந்தினர்களுக்கு சிவப்பு கம்பள மற்றும் பேண்ட் வாத்திய அணிவகுப்பு அளிக்கப்பட்டது. நல்லிணக்கத்தின் அடையாளமாக புறாக்கள் உயரமாக பறக்க விடப்பட்டது .

5வது மண்டல ஒருங்கிணைப்பாளர் டாக்டர் எஸ்தர் ஜான் தலைமையில் பங்கேற்ற அனைத்து கல்லூரியின் துணைத் தலைவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். விழாவிற்கு வந்திருந்தவர்களை கங்கா செவிலியர் கல்லூரியின் அறங்காவலர் ரமா ராஜசேகரன் வரவேற்றார். கங்கா மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் கனகவல்லி சண்முகநாதன் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சிகளை துவக்கிவைத்தார்.

கங்கா மருத்துவமனை தலைவர் டாக்டர் ஜே. ஜி. சண்முகநாதன்
தலைமை வகித்தார். தேசிய செவிலியர் சங்கத்தின் தமிழ் நாடு கிளை ஐந்தாவது மண்டல பொறுப்பாளர்கள் டாக்டர் ஜெயசுதா மற்றும் தேசிய துணை தலைவர் டாக்டர். ஜெய்னி கெம்ப் இம்மாநாட்டின் கருப்பொருளான “செவிலிய மாணவர்களின் மேம்பாட்டின் சவால்களின் தொகுப்பு” பற்றி விளக்கினர்கள்.

தமிழ்நாடு மாநில தலைவர் டாக்டர். ஆணி கிரெஸ் கலைமதி வழிகாட்டுதல் பெயரில், தமிழ்நாடு செவிலிய மாணவ கழகத்தின் டாஸ்னாகாம் முப்பதாவது ஆண்டு மண்டல போட்டிகளை ஐந்தாவது மண்டலத்தின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான இக்கல்லூரி முதல்வர் டாக்டர் எஸ்தர் ஜான் ஏற்று நடத்தினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு ரூட்ஸ் கம்பெனி, இயக்குனர் கவிதாசன் மருத்துவ அவரச காலங்களில் செவியிலியர்களின் தொண்டு இன்றியமையாததாக இருந்ததை குறிப்பிட்டு பேசினார். மேலும் தேசிய செவிலியர் சங்கத்தின் ஐந்தாவது மண்டல ஒருங்கிணைப்பாளர் டாக்டர். ஜெய சுதா மண்டல அறிக்கை வெளியிட்டார்.

இறுதியில் கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe