“ப்ராஜெக்ட் விண்வெளி ” திட்டத்தில் “டெலஸ்கோப்” உருவாக்கிய அரசு பள்ளி மாணவர்கள்

“ப்ராஜெக்ட் விண்வெளி” திட்டத்தின் மூலம் (telescope) “தொலைநோக்கி” தயாரித்து அசத்திய அரசு பள்ளி மாணவர்கள்
கோவை துடியலூர் பஞ்சாயத்து நடுநிலைப் பள்ளியில் ரோட்டரி இ-கிளப் ஆப் மெட்ரோ டைனமிக்ஸ் சார்பில் “ப்ராஜெக்ட் விண்வெளி” குறித்த பள்ளி மாணவர்களுக்கான தொலைநோக்கி (telescope) செய்முறை பயிற்சி பட்டறை இரண்டு நாட்கள் நடைபெற்றது.

“ப்ராஜெக்ட் விண்வெளி” திட்டம் ஆனது, ரோட்டரி இ கிளப் ஆப் மெட்ரோ டைனமிக்ஸ் மற்றும் ஓபன் ஸ்பேஸ் பவுண்டேசன் அமைப்புடன் இணைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கு தொலைநோக்கி கருவிகளை பயன்படுத்தும் முறைகள் குறித்து தொழில்நுட்ப ரீதியாக பயிற்சி பட்டறை வகுப்புகளை நடத்தியது.
இதில் துடியாலூர், பெரியநாயக்கன்பாளையம் பகுதிகளை சேர்ந்த 24 அரசு பள்ளி மாணவர்களை ஒருங்கிணைத்து புராஜக்ட் விண்வெளி” என்ற பெயரில் 2 நாட்கள் பயிற்சி பட்டறை நடத்தப்பட்டது. இதில் 90 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதற்கு தேவையான நிதியுதவியை ரோட்டரி இ கிளப் ஆப் மெட்ரோ டைனமிக்ஸ் சார்பில்
ரூபாய் 3.5 லட்சம் வழங்கப்பட்டது. தொலைநோக்கிக்கு தேவையான உபகரணங்கள் ஓபன் ஸ்பேஸ் பவுண்டேசன் அமைப்பு வழங்கியது. மேலும் இதற்கான தொழில் நுட்ப பயிற்சிகளையும் மாணவர்களுக்கு இவ்வமைப்பை சேர்த்தவர்கள் வழங்கினர்.

இதில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தொலைநோக்கிகளை தயாரித்தனர். அவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. மேலும், தயாரித்த தொலைநோக்கிகளை 24 பள்ளிகளுக்கும் இலவசமாக வழங்கப்பட்டது.
இறுதி நாளில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் காந்தி குமார் பாடி கலந்து கொண்டு ப்ராஜெக்ட் விண்வெளி பயிற்சியில் மாணவர்கள் செய்த தொலைநோக்கியை பார்வையிட்டு பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், ரோட்டரி இ கிளப் ஆப் மெட்ரோ டைனமிக்ஸ் தலைவர் ரெட்டேரியன் ரேஷ்மா ரமேஷ், ரொட்டேரியன் நிஷித் ஷா,
ரொட்டேரியன் திவ்யா ஹரி,
ரொட்டேரியன் வித்யா நடராஜன்,
ரொட்டேரியன் மகேஷ் பிரபு மற்றும் ரோட்டரி உறுப்பினர்கள், ஓபன் ஸ்பேஸ் பவுண்டேசன் அமைப்பு உறுப்பினர்கள், மாவட்ட கல்வி அலுவலர் புனிதா, ஆசிரியர் சித்ரா
மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
