ஜி ஆர் ஜி- எல்ஜி டிஜிட்டல் இன்னோவேஷன் டோஜோ, முதல் குழு மாணவிகளுக்கு பாராட்டு விழா
கோயம்புத்தூர், டிசம்பர் 22, 2022:
உலகின் முன்னணி ஏர் கம்பிரசர் நிறுவனங்களில் ஒன்றான எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் லிமிடெட் (BSE: 522074 NSE: ELGIEQUIP), பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் கல்லூரியுடன் இணைந்து, ஜி ஆர் ஜி – எல்ஜி டிஜிட்டல் இன்னோவேஷன் டோஜோ திட்டத்தின் கீழ் , 3 மாதங்கள் சிறப்பு பயிற்சி ( இன்டெர்ன்ஷிப் ) முடித்த 32 மாணவிகள் இடம்பெற்ற முதல் குழுவிற்கு பாராட்டு விழா சந்திரா கருத்தரங்கு அரங்கம், பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் நிர்வாக இயக்குனர் அன்வர் ஜெய் வரதராஜ் தலைமை வகித்தார். ஜிஆர்ஜி கல்வி குழுமத்தின் தலைவர் டாக்டர். ஆர். நந்தினி ரங்கசாமி முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவிகள் அஜயில் ஸ்க்ரம் பிரேம் ஒர்க் ( agile scrum framework.) பயன்படுத்தி எல்ஜியின் பல்வேறு திட்டங்களில் பணிபுரிந்துள்ளனர்.