கோவையில் உலக அல்சைமர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு வாக்கத்தான்
நினைவாற்றல் இழப்பு, நினைவாற்றல் குறைவு, மன ரீதியிலான பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளுடன் மருத்துவர்கள், மருத்துவ கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்பு …
மனிதர்களுக்கு உடல் ரீதியாக வரும் பிரச்சனைகளை கடந்து மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும் நோய் அல்சைமர் எனும் நினைவாற்றல் இழப்பு . இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வருடந்தோரும் செப்டம்பர் 21-ஆம் நாளை, உலக அல்சைமர் தினமாக அனுசரித்து விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றனர். அதன் ஒருபகுதிகாக அல்சைமர் எனும் நினைவாற்றல் இழப்பு நோய் விழிப்புணர்வு வாக்கத்தான் கோவையில் நடைபெற்றது. இன் ஹவுஸ் மெடிகேர் மற்றும் டிமென்சியா இந்தியா அலைன்ஸ் அமைப்பினர் சார்பாக பந்தய சாலையில் நடைபெற்ற விழிப்புணர்வு வாக்கத்தானை, கோவை மாவட்ட ஆட்சியர் காந்தி குமார் பாடி துவங்கி வைத்தார். விழிப்புணர்வு வாக்கத்தானில் மருத்துவர்கள் , செவிலியர்கள், செவிலியர் கல்லூரி மாணவ மாணவிகள் தன்னார்வலர்கள் விழிப்புணர்வு பாதாகைகளுடன் விழிப்புணர்வு வாக்கத்தானில் ஈடுபட்டனர் . அப்போது பேசிய மருத்துவர் ஹாசிப் கான், இந்தியாவில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது அடுத்த சில வருடங்களில் இரட்டிப்பாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நினைவாற்றல் இழப்பு, குழப்பத்தில் ஆழ்த்துகிற கடுமையான மூளை கோளாறு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தள்ளப்படுவார்கள் . மூளையில் நுண்ணுயிர்கள் புதுப்பித்தல் மற்றும் புதிய செல்கள் உருவாக்குதல் குறைய ஆரம்பிக்கும். பின்னர் மூலை தன் செயல்பாட்டை விளக்கும் நிலைக்கே தள்ளப்படும் . இதனால் ஒருவர் தான் பேசிய பேச்சையோ அல்லது செயலையோ முற்றிலுமாக மறக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு, நினைவின்றி குழப்பங்களுடன் வாழ்வார்கள் . இந்த நோய் வழக்கமாக 60 வயதை கடந்த முதியவர்களுக்கு அதிக அளவில் இருந்த நிலையில் , தற்பொழுது வயது குறைவானவர்களிடமும் அதிக அளவிலே காணப்படுகின்றன . ஒவ்வொரு 3 வினாடிக்கும் ஒருவர் இந்த நோயால் பாதிக்கப்படுவது கண்டறியப்படும் நிலையில், அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் அல்சைமரால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, இரண்டு மடங்கான அளவிலே அதிகரிக்கும் நிலை ஏற்பட்டிருக்கின்றன . எனவே இந்த நினைவாற்றல் இழப்பு எனும் அல்சைமர் நோயால் யாரும் பாதிக்கப்படக்கூடாது. அடிப்படையில் மன அழுத்தமே இந்த பிரச்சனைக்கு மூல காரணம் என்பதனால், பொதுமக்கள் விழிப்புடன் இருந்து கொள்ள வேண்டும். முறையான மனவள பயிற்சி மேற்கொள்ள வேண்டும். எனவே பொதுமக்கள் நினைவாற்றல் இழப்பு எனும் அல்சய்மர் நோயிலிருந்து விடுபட மன வலிமைக்கு ஏற்ற விடயங்களை செய்ய வேண்டும் என தெரிவித்தனர் .