மின் கட்டண உயர்வை கண்டித்தும் வரும் 27 ஆம் தேதி மனித சங்கிலி போராட்டம்
மின் கட்டண உயர்வை கண்டித்தும் வரும் 12 ஆம் தேதி மனித சங்கிலி போராட்டம்
-கோவையில் தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் அறிவிப்பு
கோவையில் தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் ஆலோசனை கூட்டம் கோவை பாலசுந்தரம் சாலையில் நடைபெற்றது. இதில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தொழில் அமைப்பினர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் கூறும் போது, மிக்ஜாம் புயல் வெள்ளம் புனரமைப்பு வழிகள் செய்கின்றனர். இதில் தொழில் துறையினர் புறக்கணிப்படுகிறோம். அம்பத்தூர் எஸ்டேட்டில் நிறுவனங்களின் இயந்திரங்கள் நீரில் மூழ்கி சுமார் ரூ.2 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டு, முழுமையாக தொழில் நிறுவனம் முடக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் தொழில் முடங்கியுள்ளது. ஒரு சில தனியார் தொழில்பேட்டை இருந்தாலும், பெரும்பாலும் அரசு தொழில்பேட்டை தான் உள்ளது. அரசை நம்பியே நாங்கள் முதலீடு செய்துள்ளோம். மொத்தமாக புயல் வெள்ள காரணமாக தொழில்முறையினருக்கு சுமார் 3 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு முறையும் தொடச்சியாக தொழில் துறை பாதிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொடங்கி, மூலப்பொருள் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு போன்ற நிகழ்வுகளால் பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்களை பாதுகாக்க வேண்டும். மத்திய அரசின் தேசிய நிவாரண நிதி தொழில்துறைக்கு சேராது. தொழிதுறையை சேர்க்க வேண்டும் என வலியுறுத்தினோம், மத்திய அரசு ஏற்க வேண்டும் தமிழக அரசு அதனை வலியுறுத்த வேண்டும்.
சில நிறுவன இயந்திரத்திற்கு காப்பீடு இருக்காது, இதனால் தொழில் துறையினர் நிர் கதியாக நிற்கின்றனர், பாதிக்கப்பட்ட தொழில் துறையினருக்கு தனி நிதி ஒதுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறோம். பேரிடரில் இருந்து மீண்டும் திரும்பி வர 6 மாதம் ஆகும். மத்திய மாநில தொழில் துறையை பாதுகாக்க வேண்டும். மின் கட்டணம் செலுத்த 18 ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுத்துள்ளனர்.
ஆனால் 2 மாதம் கால அவகாசம் வழங்க வேண்டும். மின் கட்டண உயர்வை கண்டித்தும் வரும் 12 ஆம் தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்த இருந்தோம், புயல் வெள்ளம் காரணமாக மனித சங்கிலி போராட்டம் வரும் 27 ஆம் தேதிக்கு மாற்றி ஒத்திவைக்கப்படுகிறது என தெரிவித்தார்.