WhatsApp | 9087316855
Advertise

LIFE INSURANCE AGENTS’ FEDERATION OF INDIA – Election of New Office Bearers

அகில இந்திய ஆயுள் காப்பீடுக் கழக முகவர்  சம்மேளனம் கோவை கோட்டம் சார்பில் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

கோவை அண்ணா சிலை அருகே  உள்ள ஆருத்ரா ஹாலில் அகில இந்திய ஆயுள் காப்பீடுக் கழக முகவர்  சம்மேளனம் கோவை கோட்டம் சார்பில் கோவை கோட்ட செயற்குழு கோட்டம் நடைபெற்றது.  ஜன நாயக  முறைப்படி புதிய நிர்வாகிகளை தேர்தெடுப்பதற்காக, கோவை கோட்டத்தை உள்ளடிக்கிய 19 கிளைகளில் இருந்து, பெரும் வாரியாக , அந்தந்த  கிளை பொருப்பாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். தேர்தல் அலுவலராக M .N .முருகானந்தம், லியாபி அகில இந்திய செயற்குழு உறுப்பினர்,  துணைத் தேர்தல் அலுவலராக  பரமசிவம், நியமிக்கப்பட்டு  முறையாக தேர்தல்  நடத்தப்பட்டது. கோட்டத் தலைவர், கோட்டச் செயலர் பொறுப்பிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டது.  யாரும் விண்ணப்பிக்காத நிலையில் போட்டியின்றி அனைத்து கிளைகளின் முன்மொழிவு, வழிமொழிதலுடன் தலைவராக கோ.வெ.குமணன் அவர்களும், செயலாளராக M.இராமசாமி அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

துணைப் பொறுப்புகளுக்கு கிளைகளின் பரிந்துரை அடிப்படையில், பொருளாளராக V.சந்திரசேகரன் அவர்களும் துணைத்தலைவராக N.இராமசாமி அவர்களும், அகில இந்திய செயற்குழு உறுப்பினராக M.N.முருகானந்தம் அவர்களும், மண்டல செயற்குழு உறுப்பினர்களாக S.பரமேஸ்வரன், V.பழனிச்சாமி, S.பெரியய்யா ஆகியோரும் கோட்ட இணைச் செயலாளர்களாக M.பழனிச்சாமி, M.C.கிருஷ்ண மூர்த்தி, T.N.குணசேகரன் ஆகியோரும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe