WhatsApp | 9087316855
Advertise

Inauguration ceremony of Tamil Forum on behalf of Tamil department at Sri Krishna Arts College

ஸ்ரீ கிருஷ்ணா கலைக் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் தமிழ் மன்றம் துவக்க விழா

குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறையின் தமிழ் மன்ற துவக்க விழா மற்றும் குறள் மலைச் சங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி இன்று இக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கவிஞர் மற்றும் பட்டிமன்றப் பேச்சாளர் ஜே அருள்பிரகாஷ், மாணவர்களின் ஆளுமைத் திறனை மேம்படுத்தும் அறநெறி கருத்துக்கள் குறித்து சிறப்புரையாற்றினர். மேலும் இதில் இவர் கூறுகையில் தமிழ் மன்ற நிகழ்ச்சிகள் மூலம் பன்முகத்திறன் வளர்த்துக்கொள்ளவேண்டும். மாணவர்கள் கல்லூரி பருவத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்த வேண்டும். இப் பருவம்தான் தங்களின் திறமையை பயன்படுத்தும் காலமாகும்.

மாணவர்களின் ஆற்றலை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் குறள் மலைச் சங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. குறள் மலைச் சங்கத்தின் தலைவர் ரவிக்குமார் ஏற்புரை வழங்கினார்.கல்லூரி முதல்வர் ஜெகஜீவன் தலைமை வகித்து பேசினார்.

தமிழ் மன்ற லோகோ இவ்விழாவில் வெளியிடப்பட்டது. மொழித் துறையின் டீன் R.விஜயசாமுண்டீஸ்வரி கலந்துகொண்டு பேசினார். இதில் பேராசிரியர்கள், மாணவ-மாணவியர்கள் பங்கேற்றனர்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe