WhatsApp | 9087316855
Advertise

Inauguration of new branch of Coimbatore ELCE Hospital in Palani

கோவை எல்சி மருத்துவமனையின் புதிய கிளை பழனியில் துவக்கம்

வயிறு மற்றும் மகளிர் நலனில் லேபராஸ்கோமி மற்றும் என்டோஸ்கோபி சிகிச்சைகளில் தனிமுத்திரை பதித்துவரும் கோவை எல்சி மருத்துவமனை, தனது 10 ஆவது ஆண்டின் நிறைவு நாளில் தங்களது கிளையை பழனி நகரில் விரிவுபடுத்தி உள்ளது. டாக்டர்கள் ராஜன் மற்றும் வித்யாராஜன் ஆகியோர் தலைமையில் கோவையில் இயங்கி வரும் எல்சி மருத்துவமனை, ஹெர்னியா, உணவுப்பாதை என்டோஸ்கோபி பிரிவு, மகளிர் நலம் ஆகிய சிறப்புத் துறைகளை முன்னெடுத்து ஒருநாள் அறுவை சிகிச்சை முறைகளில் தனித்து விளங்கி வருகிறது. இந்நிலையில் 10ம் ஆண்டு நிறைவு நாளில் இதன் புதிய கிளை திறப்பு விழா பழனியில் நடைபெற்றது. புதிய கிளையை கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் டாக்டர் நிர்மலா மற்றும் பழனி சித்தனாதன் சன்ஸ் நிறுவனர் சிவனேசன் ஆகியோர் திறந்துவைத்து வாழ்த்துரை வழங்கினர். பழனி நகராட்சித் தலைவர் உமாமகேஸ்வரி, துணைத்தலைவர் கந்தசாமி, முன்னாள் தலைவர் வேல்முருகன், விஜய் காட்டன்ஸ் தலைவர் அப்பாசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.எல்சியின் மருத்துவர்கள் குழு, டாக்டர் செந்தில்நாதன், டாக்டர் ரேவதி, டாக்டர் கார்த்தி, டாக்டர். முகிலன், டாக்டர் கார்த்திகேயன் மற்றும் அனைத்து ஊழியர்கள் மற்றும் செவிலியர்கள்  அனைவரும் விழாவில் பங்கேற்றனர். வாரந்தோறும் வியாழன், வெள்ளி,சனி ஆகிய கிழமைகளில் இந்தக் கிளை பழனி மக்களின் சேவைக்காக செயல்படும் என எல்சியின் தலைவர் டாக்டர் பி.எஸ்.ராஜன் தெரிவித்தார்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe