WhatsApp | 9087316855
Advertise

Inauguration of new toilet building at kuniyamuthur High School by Rotary Club of Coimbatore Midtown

ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் மிட்டவுன் சார்பில் குனியமுத்தூர் உயர்நிலை பள்ளியில் புதிய கழிப்பறை கட்டிடத்தின் துவக்க விழா

ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் மிட்டவுன் சார்பில் ரோட்டரி பொன் விழாவின் 50வது ஆண்டை முன்னிட்டு குனியமுத்தூர் உயர்நிலை பள்ளியில் மாணவர்களுக்கான புதிய கழிப்பறை கட்டிடத்தின் துவக்க விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக ரோட்டரி மாவட்டம் 3201 சேவை திட்டத்தின் தலைவர் ரொட்டேரியன் ஆர் எஸ் மாருதி கலந்துகொண்டு புதிய கழிப்பறை கட்டிடத்தை திறந்து வைத்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக ரோட்டரி மாவட்டம் 3201 முன்னாள் மாவட்ட ஆளுநர் ரொட்டேரியன் AKS ராஜசேகர் ஸ்ரீனிவாசன் கலந்து கொண்டார். 

இதில் ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் மிட் டவுன் தலைவர் ரொட்டேரியன் ஞானவள்ளல் இறசுபிள்ளை, செயலாளர் ரொட்டேரியன் முத்துக்குமாரசுவாமி, சேவை திட்ட தலைவர் ரொட்டேரியன் கிருஷ்ணகுமார், பொன்விழா ஆண்டின் தலைவர் ரொட்டேரியன் தியாகராஜன் மற்றும் 88 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் சந்தோஷ், பள்ளி தலைமை ஆசிரியர் மனோகரன், ஆசிரியர்கள், ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் மிட்டவுன் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe