WhatsApp | 9087316855
Advertise

Innovative robotics-assisted technology in joint replacement surgery introduced at Ganga Hospital

மூட்டுமாற்று அறுவை சிகிச்சையில் புதுமையான ரோபாட்டிக்ஸ்-அஸிஸ்டட் தொழில்நுட்பம் கங்கா மருத்துவமனையில் அறிமுகம்

ஜான்சன் & ஜான்சன் மெட்டெக் இந்தியா மற்றும் கங்கா மெடிக்கல் சென்டர் & ஹாஸ்பிடல் இணைந்து இன்று ஒரு அகக்காட்சி அமர்வு ஒன்றை நடத்தி, அதிகரித்து வரும் மூட்டுஅழற்சி பற்றியும், நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சை பலனை அளிக்கும் வகையில்சமீபத்திய சிகிச்சை முறையில் ஏற்பட்டுள்ள மேம்பாடுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. புதுமையான ரோபாட்டிக்ஸ்-அஸிஸ்டட் தொழில்நுட்பத்தின் வருகையினால் தனிநபர்களின் தேவைகளின்அடிப்படையில் மூட்டுமாற்று அறுவை சிகிச்சையில் துல்லியம் மற்றும் தனிப்பயனாக்கம் அதிகரித்துள்ளது.

ஒவ்வொரு நோயாளியின் தனிப்பட்ட உடற்கூறுகளின் அடிப்படையில் செயற்கைமூட்டுக்களை ரோபாடிக்-தொழில்நுட்பத்தின் உதவியால் இப்போது மாற்றியமைக்கலாம். இந்த தொழில்நுட்பம் நோயாளிகளை விரைவாக குணப்படுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, ஜான்சன் & ஜான்சன் மெட்டெக் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் சந்தீப் மக்கர் கூறுகையில், “தற்போது, இந்தியாவில் சுமார் 20,000எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் உள்ளனர். அவர்கள் சுமார் 130 கோடி மக்கள் தொகையின் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறார்கள். ஜான்சன் ஜான்சன் மெட்டெக் இந்தியா எதிர்காலத்தில் இந்தியாவில் உள்ள சுகாதார நிபுணர்களுக்கு, சிக்கலான அறுவை சிகிச்சைகள் துறையில் உலகளாவிய மருத்துவத் தரங்களுக்கு இணையான புதுமையான தொழில்நுட்பங்கள் மற்றும் ரோபாட்டிக்ஸ் உள்ளிட்ட சாதனங்களை பாதுகாப்பாகவும் திறமையாகவும் கையாளும் வகையில் பயிற்சி அளித்து அவர்களை நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்றவகையில் தயார்படுத்த உறுதிபூண்டுள்ளது. சிறந்த சிகிச்சை பலன்கள், விரைவாக குணமடைதல், நோயாளிகளுக்கு தனிப்பட்ட சிகிச்சை மற்றும் கவனிப்பை உறுதி செய்ய முடியும் என்று கூறுகிறார்.

கங்கா மருத்துவ மையம் மற்றும் மருத்துவமனைகளின் எலும்பியல், எலும்பு முறிவு, முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை துறையின் தலைவர் டாக்டர் (பேராசிரியர்) எஸ் ராஜசேகரன் கூறுகையில், “ஆரோக்கியம் பற்றி சமீபகாலமாக பேசப்படும் வார்த்தை ‘மொபிலிட்டிஇஸ் லைஃப் அண்ட் லைஃப் இஸ் மொபிலிட்டி’. கடுமையான மூட்டுவலி இருக்கும் போது, நோயாளிகள் தங்கள் மூட்டுகளில் கடுமையான வலியை உணர்கின்றனர். இது அவர்களது இயக்கத்தை கணிசமாகக் கட்டுப்படுத்துகிறது. இது நோயாளிகளின் உடல் மற்றும் மனதில் பலவிதமான தாக்கங்களை ஏற்படுத்துகின்றது. முதலாவதாக, வலியினால் ஏற்படும் இயலாமையானது அன்றாட வாழ்க்கையின் செயல்பாடுகளை மிகவும் கடினமானதாக்கும். மற்றும் சில நேரங்களில் இரவு தூக்கத்தையும் இது பாதிக்கலாம். இரண்டாவதாக,ஒரு நபர் தன்னிச்சையாக செயல்பட முடியாமல் வேறொருவரை சார்ந்திருக்கும் நிலையை ஏற்படுத்துகிறது. மிக முக்கியமான மூன்றாவது,இது நோயாளிக்கு நம்பிக்கையின்மை மற்றும் சுயமரியாதை இழப்பை ஏற்படுத்துகிறது. மூட்டு மாற்று அறுவை சிகிச்சை இந்த பிரச்சனைக்கு மிகவும் பயனுள்ள தீர்வாக இருக்கும்.

மேலும் இது அவர்களுக்கு மற்றொரு புதிய வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்கும். மொத்த மூட்டு மாற்று சிகிச்சை என்பது மிகவும் வெற்றிகரமான செயல் முறையாக இருந்தாலும், ரோபோடிக்-அஸிஸ்டட் தொழில்நுட்பம் இந்தத் துறையில் அடுத்த மிகப்பெரிய கண்டுபிடிப்பாக இருக்கும். இது நோயாளியின் குறிப்பிட்ட உடற்கூறியல் படி செயற்கை உறுப்புகளின் அளவையும் இடத்தையும் துல்லியமாக கணிக்க உதவுகிறது என்றார்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe