WhatsApp | 9087316855
Advertise

International Seminar on Tamil Knowledge Traditions in Search of the World in Coimbatore

கோவையில் உலகம் தேடும் தமிழ் அறிவு மரபுகள் என்னும் சர்வதேச கருத்தரங்கம்
கோவையைச் சார்ந்த பேராசிரியர் கி.நாச்சிமுத்து மொழி பண்பாட்டு ஆய்வு நிறுவனம், கலைகளின் ஆய்வு நிறுவனம் மற்றும் அரி பவுண்டேஷன் ஆகியவை இணைந்து நடத்தும் உலகம் தேடும் தமிழ் அறிவு மரபுகள் என்னும் சர்வதேச கருத்தரங்கம் கோவை வேளாண்மை பல்கலைக்கழக கலையரங்கத்தில், செப். 22ம் தேதி சனிக்கிழமை மற்றும் 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்கள் நடைபெற உள்ளது.


இதுகுறித்தான செய்தியாளர் சந்திப்பு அவினாசி சாலை உப்பிலிபாளையத்தில் உள்ள பத்திரிகையாளர் சங்கத்தில் நடைபெற்றது. இதில் பேசிய ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி ஓய்வு பெற்ற தமிழ் துறை தலைவர் முனைவர் சண்முகம், பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி தமிழ்த்துறை இணை பேராசிரியர் முனைவர் மா.ரேணுகா, பேராசிரியர் கி நாச்சிமுத்து மொழி பண்பாட்டு ஆய்வு நிறுவனம் செ.அசோக்குமார், ஈரோடு வெள்ளாளர் கல்லூரி ஓய்வு பெற்ற ஆங்கிலத்துறை பேராசிரியர் கண்ணம்மா, பன்னாட்டு கருத்தரங்க இணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.சி கதிரவன் ஆகியோர் கூறுகையில், தமிழ் மொழி இலக்கியம், இலக்கணம் பேசுகின்ற மொழி, என்பதை கடந்து, தமிழ் மொழியில் உள்ள அறிவு மரபு சார்ந்த கருத்துக்களை வெளிப்படுத்துவதற்காகவும் அதனை இளைய தலைமுறையினரிடம் அறிமுகப்படுத்துவதற்காகவும் இந்த பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இதன் துவக்க விழாவில் பிரெஞ்ச் கீழ் திசை ஆய்வு நிறுவன முதுநிலை ஆய்வறிஞர் பேராசிரியர் கி. நாச்சிமுத்து தலைமை தாங்குகிறார். தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் சு.முத்துசாமி மற்றும் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் சிறப்புரை ஆற்ற உள்ளனர். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி செயலர் நா.யசோதா தேவி நாகர்கோவில் பயனியர் குழும தலைவர் ப.குமாரசுவாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்க உள்ளனர். தொடர்ந்து நடைபெறும் அமர்வுகளில் பல்வேறு தலைப்புகளில் தமிழரின் வாழ்த்து முறைகள் – ஆழியார் உலக சமுதாய சேவா சங்க துணை தலைவர் உழவன் மா.தங்கவேலு, தமிழரின் வாழ்வியல் ஒழுக்கங்கள் – பிஎஸ்ஜிஆர் கல்லூரி தமிழ்த்துறை இணை பேராசிரியர் மா.ரேணுகா, சித்த மருத்துவமும் தற்க அறிவும் – பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி பேராசிரியர் மருத்துவர் ந.வேங்கடப்பன் உள்ளிட்ட பலர் பல்வேறு தலைப்புகளில் உரையாற்ற உள்ளனர். இந்த நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் ரா.ஜெகநாதன் தலைமையுரை ஆற்றுகிறார். இந்த பன்னாட்டு கருத்தரங்கில் கோவையைச் சுற்றியுள்ள கல்லூரிகளின் 600 மாணவ, மாணவியரும், இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, இத்தாலி, இலங்கையச் சார்ந்த தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கலந்து கொள்கின்றனர் என்று கூறினார்கள்

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe