WhatsApp | 9087316855
Advertise

Introduction of awareness digital book on global breast cancer awareness Video

உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு குறித்து விழிப்புணர்வு டிஜிட்டல் புத்தகம் அறிமுகம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை, ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மையத்தின் சார்பில் உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு குறித்து முதல் முறையாக விழிப்புணர்வு டிஜிட்டல் புத்தகம் அறிமுகம்.

உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் 2022 ஐ யொட்டி கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் மற்றும் ஆராய்ச்சி சார்பில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு டிஜிட்டல் புத்தகத்தை வெளியிடும் நிகழ்ச்சி ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் நடைபெற்றது.

இந்தியாவிலேயே முதன்முறையாக வெளியிடப்படும் இந்த விழிப்புணர்வு டிஜிட்டல் புத்தகத்தை எஸ்.என்.ஆர். சன்ஸ் தொண்டு அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சுவாதி ரோகித் வெளியிட்டார்.

டிஜிட்டல் புத்தக வெளியீட்டு குறித்து ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோயியல் மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குனர் டாக்டர் பி.குகன் கூறுகையில், மார்பக புற்றுநோய்க்கு எதிராக உலகம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அக்டோபர் மாதம் உலக மார்பக புற்றுநோய் மாதமாக கடைபிடிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தையொட்டி, ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோயியல் மற்றும் ஆராய்ச்சி மையம் மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு தகவல்கள் அடங்கிய டிஜிட்டல் புத்தகத்தை வெளியிட்டுள்ளது. என்றார்.

நிகழ்ச்சியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோயியல் மற்றும் ஆராய்ச்சி மைய நிர்வாகிகள், டாக்டர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோயியல் மற்றும் ஆராய்ச்சி மைய புற்றுநோயியல் அறுவை சிகிச்சை ஆலோசகர் டாக்டர் கே.கார்த்திகேஷ் நன்றி கூறினார்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe