WhatsApp | 9087316855
Advertise

JCT College of Engineering and Technology Pongal Festival

ஜே.சி.டி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் “கலைச்சாரல் சங்கமம்” என்னும் பெயரில் பொங்கல் விழா

கோவை மாவட்டம் பிச்சனூரில் உள்ள ஜே.சி.டி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் 2000க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படித்து வருகின்றனர். 

கல்லூரி வளாகத்தில் மாணவ மாணவியர் “கலைச்சாரல் சங்கமம்” என்னும் பெயரில் பொங்கல் விழாவைப் பாரம்பரிய முறையில் சிறப்பாகக் கொண்டாடினர்.

பொங்கல் வைத்து வழிபாடு செய்த பின் தொடர்ந்து கிராமிய நடனத்துடன் குதிரை ஆட்டம் மயிலாட்டம், ஒயிலாட்டம் பறையாட்டம் சிலம்பாட்டம், கோலப்போட்டி கயிறு இழுத்தல், உறியடித்தல், கிராமியச் சந்தை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் தமிழர் மரபைப் போற்றும் வகையில் இனிதே நடைபெற்றன.

இவ்விழாவின் போது நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு கல்லூரி முதல்வர் எஸ்.மனோகரன் பரிசுகளை வழங்கினார். இவ்விழாவில் அனைத்து துறை தலைவர்கள்,பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர் என பலர் கலந்து கொண்டனர்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe