சாய் காய் டூ ட்ரெடிஷனல் கராத்தே மற்றும் ஸ்போர்ட்ஸ் யூனியன் நடத்தும் 2023 ஆம் ஆண்டிற்கான கராத்தே பிளாக் பேல்ட் வழங்கும் நிகழ்ச்சி
கோவை பீளமேடு பகுதியில் உள்ள விஜய் எலன்சா ஹோட்டலில் சாய் காய் டூ ட்ரெடிஷனல் கராத்தே அண்ட் ஸ்போர்ட்ஸ் யூனியன் சார்பாக 2023ம் ஆண்டிற்கான கராத்தே பிளாக் பேல்ட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கராத்தே அசோசியேஷன் ஆஃப் இந்தியா பிரசிடெண்ட் ஹர்ஷத் அலிகான் கலந்து கொண்டார்.
முன்னதாக, இரண்டு நாட்கள் சிங்காநல்லூர் பகுதியில் கோவை மாவட்டங்களில் கராத்தே அசோசியேசன் சார்பாக கத்தா, குமிட்டே பயிற்சி முகாம் நடைபெற்றது. இப்பயிற்சியானது சாய் காய் டூ கராத்தே தமிழ்நாடு பிரசிடெண்ட் தலைவர் சாய்புரூஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் கோவை, திருப்பூர், நாமக்கல், தர்மபுரி என பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு காலை முதல் மாலை வரை அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.
மேலும், 4 ஆண்டுகளுக்கு மேலாக பயிற்சி பெற்று வந்த முன்னாள் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி முகாம் மற்றும் இறுதி தேர்வும் நடைபெற்றது. இந்த மாணவ மாணவிகளின் எதிர்காலம் கருதியும் தன்னம்பிக்கை வளர்த்துக் கொள்வதற்கும், எந்த ஒரு கஷ்ட சூழ்நிலையிலும் தாங்களை பாதுகாத்துக் கொள்வதற்கும் அதே சமயம் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி கல்வித்துறையின் சார்பாகவும், அகில இந்திய பல்கலைக்கழகம் சார்பாகவும், சங்கங்களின் சார்பாகவும் நடத்தப்படுகின்ற பயிற்சியில் சாதிப்பது எப்படி என்று பயிற்சியும் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது.
இறுதியில், தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பிளாக் பெல்ட் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கராத்தே அசோசியேஷன் ஆஃப் இந்தியா பிரசிடெண்ட் ஹர்ஷத் அலிகான் கலந்து கொண்டு சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பிளாக் பெல்ட் வழங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக சாய் காய் டூ கராத்தே துணை தலைவர் மோகன் கலந்து கொண்டார். தொடர்ந்து அனைத்து மாணவர்களுக்கும் நட்சத்திர ஓட்டலில் இரவு உணவு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஆசிய கராத்தே நடுவர் அறிவழகன் செய்திருந்தார். இதில் சீனியர் மாஸ்டர் ஜெயபிரகாஷ், மற்றும் தலைமை பயிற்சியாளர்கள் மோகன், கார்த்திக், செல்வசங்கர், ரவிசங்கர், முருகானந்தம், N.மோகன்,செல்வகுமார், ராஜேஷ்,நாசர் தீன்,வெள்ளிங்கிரி, சிவகுமார்,சீதாலட்சுமி, சுசிலா,தங்கம், சரவணன், மனோஜ்,பிரகதீஷ் என ஏராளமனோர் கலந்து கொண்டனர்.