லயன்ஸ் கிளப் ஆப் கோயம்புத்தூர் ஜூபிடர் சார்பில் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி
லயன்ஸ் கிளப் ஆப் கோயம்புத்தூர் ஜூபிடர் சார்பில் பாரத அன்னை இல்லத்தில் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி
கோவை வீரகேரளம் பகுதியில் அமைந்துள்ள பாரத அன்னை இல்லத்தில் லயன்ஸ் கிளப் இன்டர்நேஷனல் மாவட்டம் 324 டி கோயம்புத்தூர் ஜுபிடர் கிளப் சார்பில் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அபி அசோசியேட்ஸ் நிறுவனத்தின் செந்தில்குமார், கௌரி செந்தில் குமார் ஆகியோரின் மகள் செல்வி எஸ் யாதுநந்தினி பிறந்தநாளை முன்னிட்டு சைவம் மற்றும் அசைவ உணவுகளை பாரத அன்ணை இல்லத்தில் உள்ள முதியவர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு வழங்கினர்.
நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக முன்னாள் மாவட்ட ஆளுநர் அரிமா பி கே ஆறுமுகம் கலந்துகொண்டு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளர்களாக அரிமாக்கள் முகமது ஜின்னா, சாரதா, துரைராஜ், இன்ஜினியர் சந்திரசேகரன், டென்னிஸ் ஏ செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை அரிமா டிஜிஎஸ் பொன்னம்பலம் செய்திருந்தார்.