WhatsApp | 9087316855
Advertise

Margazhi Utsava Festival at Sri Ayyappa Swamy Temple

ஸ்ரீ ஐயப்ப சுவாமி திருக்கோயிலில் மார்கழி உற்சவ திருவிழா 

கோவை தடாகம் சாலை இடையர்பாளையம் காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஐயப்ப சுவாமி திருக்கோயிலில் பதினெட்டாம் ஆண்டு மண்டல பூஜை மற்றும் மகா அன்னதானம் நிகழ்ச்சி மூன்று நாட்கள் வெகு விமர்சையாக நடைபெற்றது. 

மார்கழி மாதம் ஆறாம் நாள் காலை மங்கல இசை, ஸ்ரீ மகா கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகம், பெண்களுக்கான 108 சங்கு விளக்கு பூஜை, தீபாரதனை, சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. தொடர்ந்து, மார்கழி ஏழாம் நாள் ஸ்ரீ சுதர்சன ஹோமம், நவகிரக ஹோமம், 108 சங்க அபிஷேகம் மற்றும் தீபாரதனை சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. மாலை 6 மணி அளவில் மங்கள வாத்தியங்கள் முழங்க சுவாமி ஸ்ரீ மாகாளியம்மன் கோயிலில் இருந்து திருவீதி உலா நடைபெற்றது. மார்கழி எட்டாம் நாள் ஸ்ரீ தன்வந்திரி ஹோமம், சாஸ்தா பிரதி ஹோமம், 108 கலச பூஜை, சிறப்பு நெய் அபிஷேகம், பஜனை மற்றும் உச்சி பூஜை நடைபெற்றது. தொடர்ந்து மாபெரும் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்நிகழ்வில் திருக்கோயில் குருமார்கள் லட்சுமணன் குருசாமி, தனசேகரன் குருசாமி, தேவராஜ் குருசாமி திருக்கோயில் அறக்கட்டளை நிர்வாகிகள் சரவணகுமார், சிவராஜ், சுரேஷ், கந்தசாமி, குமரகுருபரன் மற்றும் கோயில் நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe