சேலம் மாவட்டத்தில் ‘மாவீரர் நாள்’
சேலம் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாவீரர் தினம் கடைபிடிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசினார். நவம்பர் மாதம் 27ஆம் தேதி இலங்கையில் ஈழத் தமிழர் போரில் உயிரிழந்த வீரர்களை நினைவு கூறும் நாளாக “மாவீரர் தினம்” கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற பிரம்மாண்டம் நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு மாவீரர் தினம் கொடியினை ஏற்றினார். பின்னர், மறைந்த வீரர்களுக்கு தியாகச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.