WhatsApp | 9087316855
Advertise

Meeting of Journalists and Journalists on behalf of Erode District Congress Committees

ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் சார்பாக இன்று பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் சந்திப்பு

*ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான ஜவஹர் இல்லத்தில் இன்று 08/04/2023 காலை 11 மணிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவரும் ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மேலிடத்து பார்வையாளருமான முன்னாள் தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எம் என் கந்தசாமி அவர்கள் பத்திரிகையாளர்கள் & ஊடகவியலாளர்களை சந்தித்து ஜனநாயக படுகொலைகளை செய்யும் பாசிச பாஜக மோடி அரசு இளம் தலைவர் ராகுல் காந்தி மீது திட்டமிட்டு பொய்யான பிரச்சாரம் செய்து காழ்ப்புணர்ச்சியால் எம்பி பதவியை தகுதி இழப்பு செய்ததை கண்டித்தும் இந்தியா முழுக்க இன்று காங்கிரசார் சார்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெறுகிறது.

இதில் ஈரோடு மாவட்டத்தில் தொடர் போராட்டங்களாக அறவழி போராட்டங்களின் ஒரு பகுதியாக வருகிற 15 ஆம் தேதி ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் சார்பாக ஈரோடு ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது சம்பந்தமாக ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டும் விளக்கி பேசினார்.

இந்நிகழ்ச்சியில் ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் டி திருச்செல்வம், வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ் வி சரவணன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள் முன்னாள் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் ஆர் எம் பழனிசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினரும் கவுன்சிலருமான, ஈ பி ரவி, மாநில பொதுக்குழு உறுப்பினர் பா.உதய்குமார், மண்டல தலைவர்களான அல்டிமேட் தினேஷ், எச்.எம் ஜாபர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்*.

*இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் மாநில சிறுபான்மை துறை துணைத் தலைவர் எம் ஜவஹர் அலி,எஸ் சி பிரிவு மாநிலத் துணைத் தலைவர் குளம் எம் ராஜேந்திரன், மாவட்டத் துணைத் தலைவர்களான டி. கண்ணப்பன், கே எஸ் செல்வம், ஜேபி கோதண்டபாணி, எம் ஆர் அரவிந்தராஜ், மாவட்ட பொதுச் செயலாளர்களான இரா.கனகராஜன், ஏ வின்சென்ட், ஈரோடு பாராளுமன்ற இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே விஜய்கண்ணா, என் சி டபிள்யூ சி மாவட்ட தலைவி ஆர் கிருஷ்ணவேணி, நெசவாளர் அணி மாவட்ட தலைவர் சி மாரிமுத்து, ஈரோடு மாவட்ட காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் ம.முகமது அர்சத்,மாநில சிறுபான்மைத்துறை ஒருங்கிணைப்பாளர் எம்.ஜுபைர் அஹமது, ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை தலைவர் பொறியாளர் இ. மாப்பிள்ளை மீரான், மாவட்ட சிறுபான்மை துறை துணைத் தலைவர் கே என் பாஷா, மாவட்ட சேவாதள தலைவர் எஸ் முகமதுசித்திக், முன்னாள் மாமன்ற உறுப்பினர் அன்னபூரணி முன்னாள் மாநகர் மாவட்ட சிறுபான்மை துறை தலைவர் சூர்யா சித்திக், மாவட்ட நிர்வாகிகளான சார்லஸ் செல்வ பிரகாஷ், சித்தோடு பிரபு, குமரேஸ், பிராமண பெரிய அக்ரஹாரம் இப்ராஹிம், கார்த்தி, அய்யூக்கான், கோபி பிரபாகரன், அம்மாபேட்டை விஜயகுமார், பவானி நாகராஜன், விஜி மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டனர்*.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe