WhatsApp | 9087316855
Advertise

MNM Party officials who did field work at Vellalur Bridge

வெள்ளலூர் பாலத்தில் களப்பணி செய்த மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள்

சிங்கநல்லூர் அருகே களபணியில் இறங்கிய மக்கள் நீதி மய்யத்தினர்…

கோவை சிங்காநல்லூர் பகுதியில் காவல்நிலையம் பின்புறம் வெள்ளலூர் செல்லும் பாலம் உள்ளது. இந்த பாலம் பராமரிப்புயின்றி செடிகள் புதர்களால் ஆக்கிரமித்துக் காணப்பட்டது. இதனை அப்பகுதி மக்கள் நீதி மய்யத்தினர் தன்னார்வமாக களத்தில் இறங்கி தூய்மைப்படுத்தினர். அப்பகுதி மக்கள் இதை வெகுவாக பாராட்டினர். சிலர் தானாக முன்வந்து அவர்களுக்கு உதவியும் செய்தனர். அதன் வழியே சென்ற ஒரு ஆட்டோ ஓட்டுனர் இவர்களின் செயலைப் பார்த்து இவர்களுக்கு தண்ணீர் குளிர்பானங்கள் வழங்கி அவருடைய சமூக பங்கை ஆற்றினார். சில நபர்கள் இவர்களுக்கு முக கவசம் கொடுத்து பாதுகாப்பாக வேலை செய்ய உதவினர்.

இந்த சமூக சேவை பணியில் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளான ஜெய்கணேஷ், மணிமொழி, சௌந்தர்ராஜன், சண்முகசுந்தரம், ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இப்பகுதியில் இவர்களுக்கு பாராட்டு குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe