WhatsApp | 9087316855
Advertise

National Conference of Homoeopathic Medical Association at Coimbatore

கோவையில் ஹோமியோபதி மருத்துவ சங்கத்தின் தேசிய அளவிலான மாநாடு

கோவையில் இந்திய ஹோமியோபதி மருத்துவ சங்கத்தின் தேசிய அளவிலான மாநாடு நடைபெற்றது.

கோவையில் முதன் முறையாக நடைபெற்ற மாநாட்டை சங்கத்தின் நிர்வாகிகளான மருத்துவர்கள் தினேஷ் சாமுவேல்,பார்த்திபன்,அருணா பிரியா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.தேசிய அளவில் நடைபெற்ற இதில்,  தமிழ்நாடு கேரளா கர்நாடகா,மகாராஷ்டிரா,உத்தரபிரதேசம், ஆந்திரா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர்..

முன்னதாக நடைபெற்ற இதன் துவக்க விழாவில்,சிறப்பு விருந்தினர்களாக,கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் சுகாசினி,இந்துஸ்தான் கல்வி குழுமங்களின் தலைவர் சரஸ்வதி,அம்பிகா காட்டன் மில் வித்யா ஜோதிஷ்,ஆகியோர் கலந்து கொண்டனர்.மாநாட்டில் புற்று நோய் மற்றும்   ஹோமியோபதி சிகிச்சை குறித்து  மருத்துவர்கள் ரவி மற்றும் பிஜூ ஆகியோர் கருத்துரை வழங்கினர்..

மாநாட்டில் பல்வேறு நோய்களுக்கான சிகிச்சையில் ஓமியோபதி மருத்துவத்தின் பயன்கள் குறித்தும் குறிப்பாக,புற்று நோய் சிகிச்சையில் ஓமியோபதி மருத்துவத்தின் அணுகுமுறைகள் மற்றும் அதன் பயன்கள் குறித்தும், ஓமியோபதி மருத்துவர்கள் பேசினர். 

முன்னதாக ஓமியோபதி மருத்துவ சங்கத்தின் கூட்டமைப்பினர்  செய்தியாளர்களிடம் பேசினர்.. அப்போது தற்போது அலோபதி மருத்துவத்திற்கு அடுத்தபடியாக ஓமியோபதி மருத்துவத்தை பெரும்பாலான பொதுமக்கள் பயன்படுத்துவதாகவும், .ஹோமியோபதி மருத்துவ சிகிச்சை சாமானிய மக்களை சென்றடையும் வகையில் மத்திய, மாநில அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்நாடு அரசு  ஹோமியோபதி சிகிச்சைக்கு என தனி பிரிவு அமைக்க முன் வரவேண்டும் என தெரிவித்தனர்..

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe