WhatsApp | 9087316855
Advertise

Nutrition program launched in Anganwadi in Ozmin Nagar area of ​​Coimbatore Video

கோவை ஓஸ்மின் நகர் பகுதியில் அங்கன்வாடியில் ஊட்டச்சத்து திட்டம் துவக்கம்

கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட 68 வது வார்டு ஓஸ்மின் நகர் பகுதியில் அங்கன்வாடியில் ஊட்டச்சத்து திட்டம் துவக்கம் பிரதமர் நரேந்திர மோடியின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட 68 வது வார்டு ஓஸ்மின் நகர் பகுதியில் அங்கன்வாடியில் ஊட்டச்சத்து திட்டத்தை கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் துவக்கி வைத்தார்.

தொடர்ந்து மரக்கன்று நடுதல் விழா மற்றும் தூய்மை பணியினை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுவையில், கோவை மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடிகளை சீரமைத்து அவர்களுக்கு செய்ய வேண்டிய உதவிகள் அரசாங்கத்திடம் கேட்டு ஒவ்வொரு அங்கன்வாடியாக வரக்கூடிய நான்கு மாதத்தில் மகளிர் அணி சார்பாக உதவிகள் செய்ய திட்டமிட்டு இருக்கிறோம்.

நாடு முழுவதும் இளைஞர் அணி சார்பாக இரத்ததான நிகழ்ச்சிகள் பல்வேறு இடங்களில் அன்னதானங்கள் மற்றும் மருத்துவ முகாம்கள் அவை இல்லாமல் பல்வேறு மாநிலங்களை பற்றி தெரிந்து கொள்ளக்கூடிய அளவு கலாச்சார விழிப்புணர் நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe