WhatsApp | 9087316855
Advertise

Observance of World Environmental Health Day at Ukkadam Pullukadu Housing Unit by Coimbatore RAAC and FICCI FLO

கோவை ராக் மற்றும் பிக்கி புளோ சார்பில் உக்கடம் புல்லுக்காடு ஹவுசிங் யூனிட் பகுதியில் உலக சுற்றுச்சூழல் சுகாதார நாள் அனுசரிப்பு

உக்கடம் புல்லுக்காடு ஹவுசிங் யூனிட் பகுதியில் உலக சுற்றுச்சூழல் சுகாதார நாள் அனுசரிப்பு

உலகம் முழுவதும் செப்டம்பர் 26ம் நாள் அன்று உலக சுற்றுச்சூழல் சுகாதார நாளாக ஆண்டுதோறும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, கோவை குடியிருப்போர் விழிப்புணர்வு சங்கம் (ராக்) மற்றும் இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பின் மகளிர் பிரிவான (பிக்கி புளோ) சார்பில் “பசுமையை நோக்கி செல்வோம்; தூய்மையான சுவாசம் நோக்கி ஓடுவோம், குப்பைகளை சேகரிப்போம், சுற்றுச் சூழலை மாற்றுவோம்” என்ற திட்டம் இன்று காலை 6.00 மணி அளவில் கோவை உக்கடம் புல்லுக்காடு ஹவுசிங் யூனிட் பகுதியில் நடைபெற்றது. இதனை ஸ்ரீரிபு டாமன் பெவ்லி துவக்கி வைத்தார்.

இந்த செப்டம்பர் 2023 ல், பசுமையை நோக்கி செல்வோம்; தூய்மையான சுவாசம் என்ற தலைப்பில், சுற்றுச் சூழல் சுகாதார நாளை செப்டம்பர் 26 ல் அனுசரிக்கப்படுகிறது. சமுதாய பொறுப்போடு சுற்றுச் சூழல் மற்றும் நலன் பயக்கும் 3 சிறப்பான நிகழ்வுகளாக கோவையில் பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் சுற்றுச் சூழல் பாதிப்புகள் குறித்த விழிப்பணர்வு ஏற்படுத்த இந்த நிகழ்வு நடத்தப்பட்டது. கோவையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், இந்தியா உழவன், ஸ்ரீரிபு டாமன் பெவ்லி தலைமை விருந்தினராக பங்கேற்று மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், பசுமையை நோக்கி செல்வோம்; தூய்மையான சுவாசம் நோக்கி ஓடுவோம், குப்பைகளை சேகரிப்போம், சுற்றுச் சூழலை மாற்றுவோம்” என்ற திட்டம் இந்தியா முழுவதும் சிறப்பாக நடைபெற்று வருகிறது இதன் ஒரு பகுதியாக இன்று நடைபெறும் இந்த தூய்மை பணி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவர்கள் ஒரு உடற்பயிற்சியாக மேற்கொண்டு இப்பணியினை செய்வதே இதன் முக்கிய நோக்கம் ஆகும். இதன் மூலம் பொது மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவற்காக இப்பணியை நாம் அனைவரும் செய்யவேண்டும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பிக்கி புளோ முன்னாள் தலைவர் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சங்கீதா சேடன், துணை ஒருங்கிணைப்பாளர் கல்பனா ரமேஷ், உக்கடம் பகுதி ஒருங்கிணைப்பாளர்
டாக்டர் காமினி சுரேந்திரன் ஆகியோர் செய்திருந்தனர். ராக் அமைப்பின் கௌரவ செயலாளர் ரவீந்தரன் மற்றும் பிக்கி புளோ அமைப்பின் தலைவர் ரமா ராஜசேகரன், பிக்கி புளோ அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe