WhatsApp | 9087316855
Advertise

On behalf of Makkal Neethi Mayyam petition to install speed limit near Ratnapuram 7th Road Railway Bridge

ரத்தினபுரி ரயில்வே பாலம் அருகே வேகத்தடை அமைக்க மக்கள் நீதி மய்யம் சார்பில் மனு

மக்கள் நீதி மய்யம் 47 வது வார்டு சார்பில் இரத்தினபுரி 7வது வீதி ரயில்வே பாலம் அருகே வேகத்தடை நிறுவ வேண்டி கோவை மாநகராட்சி மேயர் கல்பனா அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில், கோவை மாநகராட்சி வார்டு எண் 47 இல் அமைந்துள்ள ரத்னபுரி 7வது வீதி ரயில்வே பாலத்தில் விபத்துகளை அடிக்கடி சந்திக்கும் வண்ணம் உள்ளது. பாலத்தின் கீழ் இரண்டு திசைகளிலும் இருந்து வாகனம் வேகமாக வந்து (U turn) யூ ட்டர்ன் செய்வதால் இங்கு அடிக்கடி விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆகவே பாலம் ஏறும் இடத்திலும் பாலத்தின் இரண்டு பக்க கீழ் ரோட்டிலும் வேகத்தடை அமைக்க வேண்டும் விபத்து இல்லா கோவையை உருவாக்க வேண்டும் என பொதுமக்கள் நலன் கருதி மக்கள் நீதி மய்யம் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை மக்கள் நீதி மய்யம் நகர செயலாளர் மாரியப்பன் மற்றும் வார்ட்செயலாளர் வேணுகோபால் தலைமையில் மேயிரிடம் மனு அளிக்கப்பட்டது. உடன் நிர்வாகிகள் ராஜ் மனோகர், முத்துமாரி,தாஜுதீன், டேனியல் ராஜ், கிருஷ்ணமூர்த்தி, சுப்பிரமணி மற்றும் பலர் இருந்தனர்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe