WhatsApp | 9087316855
Advertise

On behalf of the Intiya jaṉanāyaka Party of Kongu Zone 7th Annual Equality Pongal Festival and Welfare Scheme Giving Ceremony

இந்திய ஜனநாயக கட்சி சார்பில் கொங்கு மண்டல 7ம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழா மற்றும் நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா

இந்திய ஜனநாயக கட்சி சார்பில்
கொங்கு மண்டல 7ம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழா மற்றும் நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா
கோவை சின்னவேடம்பட்டியில் உள்ள ஆலம் ஹெர்பல் பார்மில் இன்று
நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஐ.ஜே. கே மாநில இணைப் பொதுச் செயலாளர் ரொட்டேரியன் ஏ.கே.எஸ் டாக்டர் லீமா ரோஸ் மார்ட்டின் தலைமை வகித்தார். ஐ.ஜே.கே கட்சியின் கொடி, பார்க்கவ குலசங்க கொடியினை ஏற்றினார். தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பொங்கல் விழாவினை தொடங்கி வைத்தார். பின்னர் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ஐ.ஜே.கே மாநில இணை பொதுச் செயலாளர்
ரொட்டேரியன் ஏ.கே.எஸ் டாக்டர் லீமா ரோஸ் மார்ட்டின் பேசுகையில், தமிழரின் தனிப்பெரும் விழாவான பொங்கலை ஆண்டுதோறும் சமத்துவ பொங்கலாக நாம் சிறப்பாக கொண்டாடி வருகிறோம். ஏழாம் ஆண்டு சமத்து பொங்கல் விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஜாதி, மத, பேதங்களை மறந்து சமத்துவம் வளர்க்கும் முறை பண்டிகை பொங்கல் தான். உழவர்களின் திருநாளாகவும், அறுவடை திருநாளாகவும் கொண்டாடப்படும் இந்த பொங்கல் பண்டிகை, உழைப்பை போற்றும் திருநாளாக கொண்டாடப்படுகிறது, நம் நாட்டின் விளைச்சல் பொங்கட்டும். விவசாயிகளும், கால்நடைகளும், செழிக்கட்டும். மகிழ்ச்சி பொங்கட்டும் என்றார்.
நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்டோருக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பினை வழங்கினார்.
நிகழ்ச்சியில்
இந்திய ஜனநாயக கட்சியின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் பி.என்.ஆர் பாரி கணபதி,
கோவை மாநகர மாவட்ட தலைவர்
சி.முத்துசெல்வன்,
மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் கவுரி ஜான் பிரிட்டோ,
கோவை வடக்கு மாவட்ட தலைவர் அந்தோணி,
திருப்பூர் மாவட்ட செயலாளர் சோனை முத்து,
நீலகிரி மாவட்ட தலைவர் ராஜ்குமார், ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் ஆக்ருதி கவிதா கோபாலகிருஷ்ணன், ஐ.ஜே.கே
கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்ட தலைவர்கள், நிர்வாக குழு உறுப்பினர்கள்,தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe