WhatsApp | 9087316855
Advertise

On the occasion of MGR’s 36th death anniversary, a grand medical camp was organized by AIADMK

எம்ஜிஆர் அவர்களின் 36 வது நினைவு நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் மாபெரும் மருத்துவ முகாம்

புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 36 வது நினைவு நாளை முன்னிட்டு அதிமுக பீளமேடு பகுதி 24-ஏ வட்ட கழகம் சார்பில் மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது.

முன்னாள் முதலமைச்சர் மற்றும் அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க, கழக தலைமை நிலைய செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வழிகாட்டுதலின்படி, பீளமேடு பகுதி 24-ஏ வட்டக் கழக செயலாளர் மாருதி மனோகரன் ஏற்பாட்டில் கோவை தண்ணீர் பந்தல், ராஜஸ்ரீ மில் வளாகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மற்றும் புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 36 வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

கோவை மாநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் மற்றும் சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே ஆர் ஜெயராமன் கலந்து கொண்டு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து நடைபெற்ற கண் பரிசோதனை, இரத்த அழுத்தம் பரிசோதனை, பல் மற்றும் பொது மருத்துவ பரிசோதனை முகாமினை துவக்கி வைத்தார். தொடர்ந்து மதியம் மாபெரும் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது.

அன்னதான நிகழ்ச்சிக்கான நிதி உதவியை
மணிஸ் தியேட்டர் ஜெகநாதன் வழங்கினார். கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் அம்மன் கே அர்ஜுனன் அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

இதில் பீளமேடு பகுதி கழக செயலாளர் உலகநாதன், லட்சுமணன், சால்ட் வெள்ளிங்கிரி, AEG செல்வராஜ் & AEG கெளதம், மாநகர மாவட்ட அவைத்தலைவர் சிங்கை முத்து, மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் துரைசாமி, மாநகர் மாவட்ட மருத்துவர் அணி இணைச் செயலாளர் பாரதி மணி, மாநகர மாவட்ட பிரதிநிதி தேவேந்திரன், பீளமேடு பகுதி மாணவரணி செயலாளர் ரஞ்சித், தம்பி அண்ணா, சின்னசாமி, செந்தில் குமார் மற்றும் கழக நிர்வாகிகள் கலை கோவிந்தராஜ், ரகுநாத், ராஜசேகர், வேலுச்சாமி, கலா, அம்சவேணி, சாந்தி, சரஸ்வதி, கவிதா, பிரியா, ராஜாமணி, ஈஸ்வரமூர்த்தி, பாலசுப்பிரமணியன், செல்வேந்திரன், கோவை நடராஜ்,

கோபாலகிருஷ்ணன், மயூரா வேணுகோபால், வினோத்குமார் , விஜயலட்சுமி, பழனியம்மாள், இந்திராணி, பரமேஸ்வரி, வினைசிங், பரமசிவம், வாட்டர் போட்டு ஆறுமுகம், அழகேஸ்வரி, சிங்கை மணி, கால் டாக்ஸி முருகன், பஞ்சர் முருகன், கிருஷ்ணகுமார், நாகேந்திரன், இளையராஜா, அண்ணாதுரை, மணீஸ் அசோகன்; சாமிநாதன், மயூரா மயில்சாமி, பிரபாகரன் MC, சேதுவராஜ் EX MC, ஆக்ரா கந்தன், வெங்கடேசமூர்த்தி, சின்னதுரை, சாமியானா கோபிநாத், மயில்சாமி, மணிமுத்து, மூர்த்தி, ஆசாரி முத்து, வசந்தி ராமச்சந்திரன், வடிவுக்கரசி, சம்பத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe