WhatsApp | 9087316855
Advertise

‘Oorja 23’ art show competitions organized by Fine Arts Club at Sri Narayana Guru College

ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் பைன் ஆர்ட்ஸ் கிளப் சார்பில் ‘ஊர்ஜா23’ எனும் கலை நிகழ்ச்சி போட்டிகள்

ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் பைன் ஆர்ட்ஸ் கிளப் சார்பில் ‘ஊர்ஜா23’ எனும் கலை நிகழ்ச்சி போட்டிகள்

கோவை மதுக்கரை க.க சாவடி அருகே உள்ள ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் பைன் ஆர்ட்ஸ் கிளப் சார்பில் ‘ஊர்ஜா23’ எனும் கலை நிகழ்ச்சி போட்டிகள் நடைபெற்றது.

ஸ்ரீ நாராயண குரு கல்லூரி பைன் ஆர்ட்ஸ் கிளப் சார்பில் 29 ஆம் ஆண்டாக ‘ஊர்ஜா23’ என்னும் கலை நிகழ்ச்சி போட்டியில் இன்று காலை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியினை ஸ்ரீ நாராயண குரு கல்லூரியின் முதல்வர் கல்பனா துவக்கி வைத்தார். இதில் மாணவர்கள் சோலோ டான்ஸ், சோலோ சாங்ஸ், குரூப் சாங், குரூப் டான்ஸ், போட்டோகிராபி, மெஹந்தி, ஹேர் டூ, ஃபேஸ் பெயிண்டிங் போன்ற பல்வேறு போட்டிகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரி ஆண்டு விழாவில் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன. இதில் துறைத்தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.

இது குறித்து ஸ்ரீ நாராயண குரு கல்லூரியின் முதல்வர் கல்பனா கூறுகையில், ஒவ்வொரு வருடமும் எங்களுடைய கல்லூரியில் கலைகளுக்காகவே தனிப்பட்ட முறையில் இந்த கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். எங்கள் கல்லூரி மாணவர்களுக்காகவே மட்டுமே நாங்கள் 29 ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தி வருகிறோம். அதுவும் பொதுவாக பிப்ரவரி 14-ஆம் தேதி ஆண்டுதோறும் நாங்கள் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்துகிறோம். இதற்கான காரணம் உலகத்திலேயே அன்பை பரிமாறி கொள்ளக்கூடிய ஒரு நாளாக பிப்ரவரி 14ம் உள்ளது. அந்த நாளில் இந்த கலை நிகழ்ச்சிகளை நடத்தினால் நன்றாக இருக்கும் என்ற நோக்கில் கலை நிகழ்ச்சிகளை நாங்கள் நடத்தி வருகிறோம். இதில் எல்லாவிதமான கலைகளுக்கும் நாங்கள் முக்கியத்துவம் அளிக்கின்றோம். ஆடல், பாடல் மற்றும் கோலப்போட்டி, ரங்கோலி மற்றும் மெஹந்தி போட்டிகள் என ஆண்கள், பெண்கள் எல்லோரும் பங்கேற்கும் வகையில் போட்டிகளை நாங்கள் நடத்தி வருகிறோம் என தெரிவித்தார்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe