WhatsApp | 9087316855
Advertise

Opening of a special lane for the differently abled at Chennai Marina for the first time in India

இந்தியாவிலே முதல்முறையாக சென்னை மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை திறப்பு

மெரினாவில் மாற்றுத் திறனாளிகளுக்கான மரப்பாதை திறப்புசென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளும் கடல் அலையைக் கண்டுகளிக்க ஏதுவாக அமைக்கப்பட்டுள்ள நிரந்தர மரப்பாதையை சேப்பாக்கம் திருவல்லிகேணி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தயாநிதி மாறன் எம்.பி., மாநகராட்சி மேயர்ஆர்.பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் கூறியதாவது: மாற்றுத் திறனாளிகளுக்கான இந்த மரப்பாதை சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர் கடல் அருகே வரை சென்று அதன் அழகைக் கண்டு ரசிக்கலாம்.விவேகானந்தர் நினைவிடம் எதிரே, மெரினா கடற்கரையின் ஆரம்பத்திலிருந்து கடல் முன்பு வரை இப்பாதை நிறுவப்பட்டுள்ளது. மரப்பாதையின் தொடக்கத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கு பயன்படுத்துவதற்காக சக்கர நாற்காலிகள் 20 எண்ணிக்கையில் வைக்கப்பட்டுள்ளன.இந்தியாவிலே முதல்முறையாக இதுபோன்ற பாதை தமிழகத்தில் தான் அமைக்கப்பட்டுள்ளது. பாதைஅருகே மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பறை வசதியும் தற்காலிகமாக ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.மெரினாவில் மாற்றுத்திறனாளிகள் நடைபாதை திறப்பு; உடன்பிறப்பாக உள்ளம் பூரித்து மகிழ்கிறேன் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் ட்வீட்அழகை மாற்றுத்திறனாளிகள் அருகே இருந்து பார்க்கும் வகையில், தமிழக அரசால் நடைபாதை திறக்கப்பட்டுள்ளது.சென்னை மெரினா கடற்கரை, உலகின் இரண்டாவது பெரிய கடற்கரையாக இருந்து வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்தக் கடற்கரைக்கு வந்து அதன் அழகை ரசித்து வருகின்றனர். ஆனால், மாற்றுத்திறனாளிகள் கடற்கரைக்கு வந்து செல்வதில் சிரமம் இருந்தது. கடந்த ஆண்டில், மாற்றுதிறனாளிகள் ஒருநாள் கடற்கரை வந்துச் செல்லும் வகையில் தற்காலிக பாதை அமைக்கப்பட்டு, அவர்கள் கடற்கரையை ரசித்தனர். இதனையடுத்து, அப்போது நிரந்தர பாதை அமைக்கப்படும் என தமிழக அரசால் தெரிவிக்கப்பட்டது.அதன்படி, சென்னை மெரினா கடற்கரையின் அழகை அருகே சென்று மாற்றுத்திறனாளிகளும் ரசிப்பதற்காக நடைபாதை அமைக்கும் பணிகள் சுமார் ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் தமிழக அரசால் முன்னெடுக்கப்பட்டது. இந்த நடைபாதை 263 மீட்டர் நீளமும், 3 மீட்டர் அகலமும், தரையில் இருந்து ஒரு மீட்டர் உயரமும் கொண்டது.மாற்றுத்திறனாளிகள் மரத்தால் முதியோர் சிரமம் இன்றி நடக்க நடைபாதையின் இருபுறங்களிலும் கைப்பிடிகள் போலவே மரத்தால் அழகுற அமைக்கப்பட்டிருக்கிறதுமணற்பரப்பில் இருந்து சற்று உயரம் கூட்டி அமைக்கப்பட்டுள்ள இந்த நடைபாதையில் எந்த சிரமமும் இன்றி மாற்றுத்திறனாளிகள் செல்லலாம். மேலும் சக்கர நாற்காலிகளை பயன்படுத்துவோர் இந்த நடைபாதை வழியாக சென்று கடல் அழகை ரசித்து மகிழலாம். இதற்கேற்ப சர்வீஸ் சாலையில் இருந்து நடைபாதைக்கு இருபுறத்திலும் சாய்வுதளம் அமைக்கப்பட்டுள்ளது.‘சிங்கார சென்னை 2.0’ திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டு இந்த நிரந்தர நடைபாதை விவேகானந்தர் இல்லத்துக்கு எதிரே மணற்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், இன்று மெரினா வந்த தங்கை வைஷ்ணவி “Dream Come True” என்கிறார். ஆம்! பலரின் கனவு மெய்ப்பட்டுள்ளது. சொன்னபடியே நிரந்தரமாக மாற்றுத்திறனாளிகளுக்கான பாதையை அமைத்துவிட்டோம். உங்களின் உடன்பிறப்பாக உள்ளம் பூரித்து நானும் மகிழ்கிறேன்! என்று பதிவிட்டுள்ளார்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe