WhatsApp | 9087316855
Advertise

Organized Flag Hoisting Ceremony and welfare programs on behalf of AAMK -video

அமமுக சார்பில் கழக கொடியேற்று விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கோவை மாநகர் மாவட்டம் ராமநாதபுரம் பகுதி கழகம் சார்பில் கோவை ஒலம்பஸ் பகுதியில் கழக கொடியேற்று விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவையில் அமமுக கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கோவை திருப்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

இதன் ஒரு பகுதியாக கோவை மாநகர மாவட்ட கழக செயலாளர் N.R.அப்பாதுரை அவர்களின் ஏற்பாட்டில் கோவை ராமநாதபுரம் ஒலம்பஸ் பேருந்து நிலையம் அருகில் கழக கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

முன்னதாக ராமநாதபுரம் பகுதியில் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்களுக்கு மேளதாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து நிகழ்ச்சிக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டு கொடியேற்றி வைத்து நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில்..

கோவை மாநகர் மாவட்ட அவைத்தலைவர் நக்கீரன், இணைச்செயலாளர் கோமதி, துணைச் செயலாளர் ஏவி மூர்த்தி, வடக்கு சட்டமன்ற பொது குழு உறுப்பினர் பாலு மோகன், சிங்காநல்லூர் சட்டமன்ற பொது குழு உறுப்பினர் சௌந்தரராஜன் மாநில இலக்கிய அணி துணைத் தலைவர் கோவை ராஜகோபால்
ராமநாதபுரம் பகுதி கழக செயலாளர் நாகராஜன்
வடவள்ளி பகுதி கழக செயலாளர் கருப்புசாமி, சங்கனூர் பகுதி கழக செயலாளர் செல்ல பாண்டியன், சாய்பாபா காலனி பகுதி கழக செயலாளர் ராமநாதன், கணபதி பகுதி கழக செயலாளர் கருப்புசாமி, நஞ்சுண்டாபுரம் பகுதி கழக செயலாளர் மதனகோபால், சிங்காநல்லூர் பகுதி கழக செயலாளர் ஜெயக்குமார், ஆவாரம்பாளையம் பகுதி கழக செயலாளர் ஆட்டோபாலு, பீளமேடு பகுதி கழக செயலாளர் சாமியான பாபு ஒண்டிப்புதூர் பகுதி கழக செயலாளர் ஜெய்சங்கர் மற்றும் பகுதி கழக நிர்வாகிகள்….
சார்பு அணி மாவட்ட செயலாளர்கள் எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் எஸ் ஆர் செல்வா, அம்மா பேரவை மாவட்ட செயலாளர் சிங்கை சேது, இளைஞரணி மாவட்ட செயலாளர் பசும்பொன் குமார் மகளிர் அணி மாவட்ட செயலாளர் ஆலிஸ் ராணி, தகவல் மற்றும் தொழில் நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் விக்னேஷ் குமார், இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் கலைவாணி மீனவர் அணி மாவட்ட செயலாளர் பாலச்சந்திரன், அமைப்பு சாரா ஓட்டுநர் மாவட்ட செயலாளர் அப்துல் ஹமீது இலக்கிய அணி மாவட்ட செயலாளர் எழில் பாண்டியன் மற்றும் சார்பு அணி மாவட்ட நிர்வாகிகள் வட்ட கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கழகத் தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe