WhatsApp | 9087316855
Advertise

“PhysioArise 2023” program on the occasion of World Physiotherapy Day

உலக பிசியோதெரபி தினத்தை முன்னிட்டு “பிசியோ அரைஸ் 2023” நிகழ்ச்சி

உலக பிசியோதெரபி தினத்தை கொண்டாடும் வகையில் தமிழ்நாடு பிசியோதெரபி டாக்டர்ஸ் அசோசியேசன் சார்பாக “பிசியோ அரைஸ் 2023” எனும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

கோவை சரவணபட்டி பகுதியில் உள்ள தனியார் அரங்கில் தமிழ்நாடு பிசியோதெரபி டாக்டர்ஸ் அசோசியேசன் சார்பாக சார்பாக “பிசியோ அரைஸ் 2023” என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக விஜய் டிவி புகழ் நகைச்சுவை நடிகர் ஈரோடு மகேஷ் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும் இந்நிகழ்ச்சியில் சிறந்த பிசியோதெரபி மருத்துவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.அதன் பின்னர் மூட்டு நோய்கள் குறித்த பிசியோதெரபி கருத்தரங்கு நடைபெற்றது. மேலும் கல்லூரி மாணவ,மாணவிகள் ஏராளமானோருக்கு பல்வேறு கலை, இலக்கியம் மற்றும் அறிவியல் போட்டிகள் நடைபெற்றது.இதில் மாநிலத்தலைவர் டாக்டர்.ராஜசெல்வகுமார், மாநிலபொதுச் செயலாளர் டாக்டர்.ராஜேஷ்கண்ணா, பொருளாளர் டாக்டர். அம்சவள்ளி, சங்க பதிவாளர் சுகன்யா தேவி உட்பட பல்வேறு பிசியோதெரபி கல்லூரி முதல்வர்கள், பிசியோதெரபி மருத்துவர்கள் என ஏராளமனோர் கலந்து கொண்டனர்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe