WhatsApp | 9087316855
Advertise

Policemen celebrating Pongal in traditional attire at Tirupur South Police Station

திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் கொண்டாடிய காவலர்கள்

திருப்பூர் மாநகர காவல்த்துறையின் சார்பில் தெற்கு காவல் நிலையத்தில் காவலர்கள் பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் வைத்து ஆடி பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.தை திருநாளாம் பொங்கல் திருநாள் இன்று நாடெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள் சார்பில் பொங்கல் வைக்கும் நிகழ்வு காவல் ஆய்வாளர்.பிச்சையா தலைமையில் நடைபெற்றது. முன்னதாக காவலர்கள் அனைவரும் பாரம்பரிய உடை அணிந்து காவல் நிலையத்திற்கு முன்னர் வண்ண கோலமிட்டு பொங்கல் வைத்து கொண்டாடினர். தொடர்ந்து பொங்கல் பானையில் பொங்கல் பொங்கி வரும் பொழுது குலவை முழக்கமிட்டு பொங்கலோ பொங்கல் என முழக்கமிட்டும் ஆடிப்பாடியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.மேலும் இந்த தெற்கு காவல் நிலையம் கடந்த ஆண்டு தமிழகத்தில் சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டு முதல்வரின் விருதை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe