WhatsApp | 9087316855
Advertise

Provide protection to cows roaming on roads – Social activist demand video

சாலைகளில் நடமாடும் மாடுகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் -சமூக ஆர்வலர் கோரிக்கை

சாலைகளில் நடமாடும் மாடுகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் கோவையில் சமூக ஆர்வலர் கோரிக்கை

கோவையில் வட மாநில இளைஞர் மற்றும் சமூக ஆர்வலருமான
விகாஸ் மனோட் வனவிலங்குகளுக்கு ஆதரவாக பல்வேறு யாக பூஜைகள், விழிப்புணர்வுகளை செய்து வருகிறார். கோவை மாவட்டத்தில் அடிக்கடி ஏற்படும் ரயில் விபத்தில் இருக்கும் யானைகளுக்கு யாக பூஜையை நடத்தியுள்ளார். சமீபத்தில் ராஜஸ்தானில் லேம்பி வைரஸால் இறந்து போன மாடுகளுக்கு யாக பூஜை நடத்தியும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கினார். தற்போது கோவை மாவட்டத்தில் சாலைகளில் நடமாடும் மாடுகளுக்கு ஆதரவாக இலவச ஆம்புலன்ஸ் மற்றும் குப்பைகளிலுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை சாப்பிடும் மாடுகளை பாதுகாப்பிற்காக விழிப்புணர்வு ஏற்படுத்து வருகிறார்.

இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது அவர் கூறுகையில், கோவையில் சாய்பாபா காலனி, ஆர் எஸ் புரம் காந்திபுரம் ஆகிய பல்வேறு பகுதிகளில் பசுமாடுகளை வளர்ப்பவர்கள் மேய்ச்சலுக்காக குப்பை கூளங்களில் சாப்பிட விடுகின்றனர். அப்போது கால்நடைகள் பிளாஸ்டிக் பைகளையும் சேர்த்து உட்கொள்கின்றன. இதனால் பசு மாடுகளுக்கு பல்வேறு வகையான உபாதைகள் ஏற்படுகிறது. எனவே கால்நடைகளை இதுபோன்று குப்பைகள், பிளாஸ்டிக்குகளை  சாப்பிட அனுமதிக்காமல் ஆரோக்கியமான உணவுப் பொருட்களை வழங்க வேண்டும் என்றார்.

மேலும், சாலைகளில் அடிபட்டு கிடைக்கும் மாடுகளுக்கு 24 மணி நேரமும்  கால்நடை மருத்துவமனைகள் செயல்பட வேண்டும். சில மாதங்களுக்கு முன் ராஜஸ்தான் மாநிலத்தில் லம்பி வைரஸ் என்னும் கொடிய நோயால் ஏராளமான பசு மாடுகள் இறந்துள்ளன. இதுபோன்று சூழ்நிலையில் கால்நடைகளை பராமரிக்க 24 மணி நேரமும் கால்நடை மருத்துவமனைகள் செயல்பட வேண்டும் என்றார்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe