WhatsApp | 9087316855
Advertise

QR line on gas cylinders to prevent irregularities including underweight

எடை குறைவு உள்ளிட்ட முறைகேடுகளை தடுக்க, காஸ் சிலிண்டர்களில், ‘கியூஆர் கோடு

எடை குறைவு உள்ளிட்ட முறைகேடுகளை தடுக்க, காஸ் சிலிண்டர்களில், ‘கியூஆர் கோடு*எடை குறைவு உள்ளிட்ட முறைகேடுகளை தடுக்க, சமையல் காஸ் சிலிண்டர்களில், ‘கியூஆர் கோடு’ எனப்படும் ரகசிய குறியீட்டை அச்சிட, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.**இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், வீடுகளுக்கு, 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டிற்கு 19 கிலோ எடையிலும் சமையல் காஸ் சிலிண்டர்களை விற்கின்றன.**அவை, எண்ணெய் நிறுவனங்கள் நியமித்த காஸ் ஏஜன்சிகள் வாயிலாக வினியோகம் செய்யப்படுகின்றன.**சில இடங்களில் சிலிண்டர் எடை குறைவாக வினியோகம் செய்யப்படுவதாக புகார் எழுகிறது. இதற்கு சில ஏஜன்சிகள் மற்றும் அவற்றில் பணிபுரியும் ஊழியர்களே காரணம்.**எனவே, சிலிண்டர் எடுத்து வரும்போது எடை சரிபார்த்து வாங்குமாறு, எண்ணெய் நிறுவனங்கள் அறிவுறுத்துகின்றன.**இதையடுத்து, எடை குறைவு முறைகேடுகளை தடுக்க சமையல் காஸ் சிலிண்டர்களில், ‘கியூஆர் கோடு’ எனப்படும் ரகசிய குறியீட்டை அச்சிட, எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.**அந்த குறியீட்டை வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் போனில் ‘ஸ்கேன்’ செய்தால், சிலிண்டரின் எடை, சிலிண்டர் நிரப்பிய ஆலை, தேதி, எந்த ஏஜன்சியில் இருந்து வந்தது உள்ளிட்ட விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.*

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe