WhatsApp | 9087316855
Advertise

Ratnam Group’s 50th Golden Jubilee Program – Minister Anbil Mahesh Poiyamozhi Participation

இரத்தினம் குழுமத்தின் 50ம் ஆண்டு பொன்விழா நிகழ்ச்சி – அமைச்சர்  அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு

இரத்தினம் குழுமத்தின் 50ம் ஆண்டு பொன்விழா நிகழ்ச்சி – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்புகோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள இரத்தினம் குழுமத்தின் 50ம் ஆண்டு பொன்விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொண்டார். இந்நிகழ்வில் 50 வது ஆண்டு பொன்விழா நினைவுத் தூண் , புத்தாக்க மற்றும் வடிவமைப்பு சிந்தனை ஆய்வகம் மற்றும் பொன்விழா நினைவுக் கட்டிடம் ஆகியவை அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. மேலும் , இரத்தினம் குழுமத்தின் பொன்விழா நினைவு இதழினை வெளியிட்டார். பொன்விழா நினைவு இதழினை தமிழக அமைச்சர் வெளியிட இரத்தினம் குழுமங்களின் தலைவர் டாக்டர் மதன் ஏ செந்தில் , இரத்தினம் இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியின் தாளாளர் ஷிமா செந்தில் இரத்தினம் கல்விக் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் மாணிக்கம் , இரத்தினம் குழுமங்களின் இயக்குநர் டாக்டர் நாகராஜ் பாலகிருஷ்ணன் மற்றும் இரத்தினம் கல்வி நிறுவனங்களின் தலைவர்கள் ஆகியோர் பெற்றுக் கொண்டார். இவ்விழாவில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ,தமிழகத்தில் உயர்தரக் கல்வியை பல கல்வி நிறுவனங்கள் வழங்கி வருகிறது. அவற்றில் இரத்தினம் கல்வி குழுமம் ‘ குறிப்பிடதக்க ஒன்று எனக் குறிப்பிட்டார் . மேலும் , 50 வது ஆண்டு கொண்டாட்டத்தில் தாம் கலந்து கொண்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe