WhatsApp | 9087316855
Advertise

Relief on behalf of Udiyampalayam Bharatmata Foundation

மழையால் பாதித்த தென் மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று நிவாரணம் வழங்கிய பாரதமாதா நற்பணி அறக்கட்டளை

உடையாம்பாளையம் பாரதமாதா அறக்கட்டளை சார்பில் பெரும் மழையால் பாதிப்படைந்த தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமபுற மக்களுக்கு தேவையான அடிப்படை பொருட்களை வழங்குவதற்கு கோவை உடையாம்பாளையம் பகுதியில் இருந்து நிவாரண பொருட்கள் கொண்டு செல்லப்பட்டது.

பாரதமாதா நற்பணி அறக்கட்டளை கோவையில் 127 வருடங்கள் மேலாக பல்வேறு சேவைகளை செய்து வருகிறது. குறிப்பாக சுனாமி, கஜா புயல், கேரளா மற்றும் தமிழகத்தில் பேரிடர் காலங்களில் ஏற்பட்ட பாதிப்புகளில் பொது மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை நேரில் சென்று வழங்கினர்.

இந்நிலையில், கடந்த நாட்களுக்கு முன்பாக தென் தமிழகத்தில் ஏற்பட்ட கனமழையால் தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் பெருமளவில் மக்கள் பாதிப்புக்குள்ளாயினர். இந்நிலையில் அவர்களுக்கு தேவையான அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் உடையாம்பாளையம் பாரதமாதா கட்டளை சார்பில் மூன்று நாட்களுக்கு நேரடியாக சென்று வழங்க உள்ளனர். 

இதனை கோவை உடையாம்பாளையம் பகுதியில் பாரதமாதா நற்பணி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கௌரிசங்கர் தலைமையில் கார்த்திக் ராஜா சரவணன் பிரபு மெய் அரசன் சுஜன் பிரவீன் சுரேஷ் சக்தி மாதவன் தினேஷ்குமார் டார்வின் குணசேகரன் இளங்கோ திலீப் குமார் ஆகியோர் நிவாரண பொருட்களை கொண்டு சென்றனர்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe