WhatsApp | 9087316855
Advertise

Reunion program at CMS College, Chinnavedampatti Coimbatore

கோவை சின்னவேடம்பட்டி பகுதியிலுள்ள சி.எம்.எஸ் கல்லூரியில் ரி யூனியன் எனும் நிகழ்ச்சி

2003 to 2006வது வருடம் படித்த முன்னாள் மாணவர்கள் அவர்களது ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

கோவை சின்னவேடம்பட்டி பகுதியிலுள்ள சி.எம்.எஸ் கல்லூரியில் ரி யூனியன் எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கடந்த 17 வருடங்களுக்கு முன் அதாவது 2003 மற்றும் 2006 பயின்ற 100க்கும் மேற்ப்பட்ட முன்னாள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் வேறு வேறு நாடுகளிலும், மற்ற மாநிலங்களில் இருந்து வந்திருந்தனர். இவர்களை படித்து வைத்த ஆசிரியர்களை பொன்னட போர்த்தி கெளரவித்தனர். பின்னர் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு அவர்களது பள்ளி அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். பிறகு அவர்கள் படித்த வகுப்பறைக்கு சென்று அங்குள்ள இருக்கையில் அமர்ந்து அவர்களது பள்ளியில் படித்து அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். மேலும் கலை நிகழ்ச்சிகள் சண்ட மேளம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதில் கிருஷ்ணா மற்றும் அசிஸ்டன்ட் ப்ரொபசர் ஷாலினி, சி.எம்.எஸ் எஜூகேஷனல் சேர்டேபிள் ட்ரஸ்டின் சேர்மன் ராஜகோபால், vice சேர்மன் அசோக், செகரட்டரி வேணுகோபால், டிரஸரர் ரவிக்குமார், ஃபார்மர் பிரசிடெண்ட் வார்கி, சி.எம்.எஸ் எஜுகேஷனல் டிரஸ்டின் தலைவர் ரகுராம், மற்றும் சி.எம்.எஸ் கல்லூரி அலுமினி அசோசியேசன் லட்சுமணன், அலுமினி அசோசியேசன் ஒருங்கிணைப்பாளர் சுனிதா, டாக்டர்.சினி, பிரேமா,சுஜிதா என பலர் கலந்து கொண்டனர்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe