WhatsApp | 9087316855
Advertise

RGF (Rathanam Grand Best) art shows

ஆர்.ஜி.எப் (இரத்தினம் கிராண்ட் பெஸ்ட்) எனும் கலை நிகழ்ச்சிகள்

கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள இரத்தினம் தொழில்நுட்ப வளாகத்தில் ஆர்.ஜி.எப் (இரத்தினம் கிராண்ட் பெஸ்ட் ) என்ற பெயரில் தேசிய அளவிலான கருத்தரங்கும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 240க்கும் கல்லூரிகளிலிருந்து, 6,000க்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர் கலந்து கொண்டனர். இதில் மாணவர்களின் தனித்திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் துறை சார்ந்த பல்வேறு போட்டிகளும், அவர்களின் கலைத் திறனை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் இவ்விழாவில் மிஸ்டர்.ஆர்.ஜி.எப் என்ற ஆணழகன் போட்டியும் நடைபெற்றது. இதில் வெற்றிபெற்றவர்களுக்கு சான்றிதழும் ,கேடயமும், பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.
மாணவர்களின் தனித்திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் வெள்ளித்திரை பிரபல நட்சத்திரங்கள் பலர் இந்த ஆர்.ஜி.எப் (இரத்தினம் கிராண்ட் பெஸ்ட்) விழாவிற்கு வருகை புரிந்தனர். விஜய் டிவி புகழ் பலகுரல் கலைஞர் தவிக்னேஷ் , பின்னணிபாடகி ஸ்ரீநிஷா, பிரபல வெள்ளித்திரை நட்சத்திரம் நடிகை அனிகா சுரேந்திரன், நடிகர், இசையாம்ப்பாளர் ஹிப் பாப் தமிழா ஆதி, நடிகர் ஜாபர் என திரையுலக நட்சத்திரங்கள் பலரும் வந்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தி இந்த விழாவை சிறப்பித்தனர்.

மேலும் ஹிப் பாப் தமிழா ஆதி நடித்து வெளிவர இருக்கும் “வீரன்” திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் இத்திரைப்படத்தின் இயக்குநர், பாடலாசிரியர் விவேக், மற்றும் நடிகர் சசி ஆகியோர் கலந்து கொண்டனர். பாடலின் இசைத்தட்டு இரத்தினம் கல்விக் குழுமங்களின் தலைவர் மதன் செந்தில் வெளியிட்டார். இதன் தொடர்ச்சியாக மாணவர்களுக்கு புகழ்பெற்ற இசை நிறுவனமான மசாலா கபே(Masala Coffee)யின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை அனைத்து மாணவ,மாணவியரும் ரசித்து கொண்டாடினர்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe